தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bhagavan Is In Krittikai Nakshatra: கிருத்திகையில் கோலோச்சும் குரு பகவான்.. நற்பலன்களைப் பெறும் ராசிகள்

Guru Bhagavan Is In Krittikai Nakshatra: கிருத்திகையில் கோலோச்சும் குரு பகவான்.. நற்பலன்களைப் பெறும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Apr 22, 2024 08:52 PM IST

Guru Bhagavan Is In Krittikai Nakshatra: குரு பகவான், கிருத்திகை நட்சத்திரத்துக்குப் பெயர்ந்துள்ளார். இதன் தாக்கத்தால் சில ராசியினர் நற்பலன்களைச் சந்திக்கின்றனர். அவை குறித்துப் பார்ப்போம்.

குரு பகவான்.
குரு பகவான்.

குரு பகவான், ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணிப்பார். அதேநேரம் சில நட்சத்திரங்களை மாற்றி டிராவல் செய்வார்.

வரும் மே 1ஆம் தேதி, குரு பகவான், ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மேலும், குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியானது கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடந்துள்ளது. அதன்படி, குரு பகவான், மேஷ ராசியின் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ந்துள்ளார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மிதுனம்: இந்த ராசியினருக்கு குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்துக்குப் பெயர்வது, வருவாயில் கூடுதலைத் தரக் கூடியது.குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் இத்தனை நாட்களாக வரன் அமையாத ராசியினருக்கு, வரன் அமையும். மிதுன ராசியினருக்கு சைடு பிசினஸ் செய்யும் வாய்ப்புள்ளது. இதற்கு முன், பல்வேறு இடங்களில் இன்வெஸ்ட்மென்ட் செய்திருந்தால் அதில் இருந்து மெல்ல லாபம் வரத் தொடங்கும். பணியிடத்தில் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசும் வாய்ப்புள்ளது. மேலும், இலட்சியங்களை எட்டவும், திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்கவும் மகத்தான ஆதரவைப் பெறப்போகிறீர்கள். வியாபாரம் அமோகமாக இருக்கும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சக நண்பர்களுடன் இணைந்து பணியாற்றுவது , வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். ஒத்த எண்ணம் கொண்டவர்களை நீங்கள் சந்திப்பீர்கள்.

மேஷம்: இந்த ராசியினருக்கு, குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால், தொழில் முனைவோருக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். போட்டியாளர்களின் தொல்லை குறையும். இத்தனை நாட்களாக சம்பாதித்தது எல்லாம் கரைந்துபோய்விட்டதே என வருத்தப்படும் நபர்கள், வங்கியில் சேமிப்புக் கணக்கினைத் தொடங்கி சேமிப்பீர்கள். இத்தனை நாட்களாக , பிள்ளை இல்லை என வருத்தப்படும் தம்பதிகள், இக்காலகட்டத்தில் முயற்சித்தால் சிசு நிற்கும். வியாபாரம் செய்யும் நபர்களுக்கு, பார்ட்னரால் நன்மைகள் கிடைக்கும். திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு சில நல்ல திருமண முன்மொழிவுகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும். பொதுவாகவே குறைவாக பேசும் நபராக இருந்தாலும், இந்த காலகட்டத்தில் மிகவும் அதிகமாகப் பேசுவீர்கள். உங்களது நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தொழிலில் உள்ள நுணுக்கங்களையும் படிப்படியாக கற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பார்ட்னரிடம் சின்ன சின்ன பிரச்னைகள் வந்தாலும் அதனை எளிதில் தீர்த்துக் கொள்வீர்கள்.

கடகம்: இந்த ராசியினருக்கு குருவின் நட்சத்திரப் பெயர்வால், தொழில் முனைவோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வீட்டுக்கு வாங்கிப் போடுவீர்கள். வியாபாரிகளுக்கு இத்தனை நாட்களாக வராத கடன்கள் வந்து சேரும். வேலை கிடைக்காத நபர்களுக்கு, ஊதிய உயர்வுடன் கூடிய பணி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு அடுத்தகட்ட பொறுப்புகள், பதவிகள் வந்துசேரும். உங்களது சமயோசித தந்திரங்களால் வாழ்வில் முன்னேறுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்