Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.29 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.29 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.29 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 28, 2024 03:12 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 29 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.29 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.29 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் இந்த நாளில் தியானம் செய்வது நன்மைகளை தரும். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உண்டாகும். அலுவலகத்தில் முக்கிய பணிகளை இன்றே முடிக்கவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல வேண்டிய வாய்ப்பு உண்டாகும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்மைகள் மிகுந்த நாளாக இருக்கும். படிக்கும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் சிறப்பான முறையில் படிப்பார்கள். சிலருக்கு வெளிநாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். 

மிதுனம்

மிதுமம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்மைகள் மிகுந்த நாள். சிலருக்கு பிரிந்த காதல் மீண்டும் சேரும். புதிய முதலீடுகளில் ஆர்வம் பிறக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றிகள் காண வேண்டிய நாள். வரவு செலவுகளை முறையாக கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் இன்று நேர்மறை சிந்தனை உடன் செயல்படுவார்கள். தொழிலிலி உங்கள் பங்குதாரர் சில பிரச்சினைகளை எழுப்பலாம். சில பிரச்னைகள் உங்களை சோர்வடைய செய்யலாம். 

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தைல் கவனம் செலுத்த வேண்டிய நாள்.  உங்கள் நிதிநிலை வலுவாக இருக்கும். அலுவலகத்தில் சில குழப்பங்கள் உண்டாகலாம். தொழிலில் பணிச்சுமைகள் கூடுதலாக இருக்கும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வெளியிடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner