Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.26 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.26 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.26 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 25, 2024 02:42 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 26 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.26 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.26 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு பேச்சில் இனிமை இருக்கும். முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். பேச்சிலும், செயலிலும் பொறுமை தேவை. மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உத்தியோகத்தில் முன்னேற்ற பாதைகள் அமையும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை உடன் செயல்பட வேண்டிய நாள். ஆனால் தன்னடக்கத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினர் உடன் வாக்குவாதம் வேண்டாம். அமைதியை கடைப்பிடிக்கவும். தாயின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில்  ஆன்மீக நாட்டம் கூடும். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிகப்படியான செலவுகள் ஏற்படும். ஆடைகள் மீதான ஆர்வம் கூடும். தந்தையின் ஆதரவால் வியாபாரம் வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை உடன் செயல்படுவார்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு செல்வீர்கள். சிலரிடம் இருந்து ஆடைகளை பரிசாக பெறுவீர்கள். அலுவகலத்தில் செல்வாக்கு கூடும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். சிக்கல்கள் இருந்தாலும் மனம் கலங்காமல் இருக்கும். பேச்சில் தெளிவும், நிதானமும் தேவை. ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தந்தை வழியில் அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படலாம். செயலில் பொறுமையாக இருங்கள். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner