Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 19, 2024 02:50 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 20 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.20 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.20 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். மனைவியுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். நிதி சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் இருக்காது. வீட்டுப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில் நிலை வலுவாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் காதலருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். மனைவியுடன் மோதல்களைத் தவிர்க்கவும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாள். முதலீடு தொடர்பான சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக கிடைக்காமல் நிலுவையில் இருந்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். குழந்தைகளுடன் ஆனந்தமாக நேரம் செலவிடுவீர்கள். வியாபாரிகள் தொழிலை விரிவு செய்வீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை தொடங்கும் முன் எச்சரிக்கை தேவை. உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும் நண்பர்கள் உங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்களுக்கு செல்வாக்கும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை கண்டு அஞ்சும் நிலை உண்டாகும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதிகாரம் மிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். அலுவலகம் தொடர்பான வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

சிம்மம் 

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான பலன்களை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பணவரவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நல்ல முதலீட்டு வாய்ப்புகள் கூடும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். வேலை வாய்ப்பில் இருந்த தேக்கநிலை மாறும். வியாபாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். பழைய முதலீடுகள் சுமாரான லாபத்தை தரும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Whats_app_banner