Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.29 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.29 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.29 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 28, 2024 03:25 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 29ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.29 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.29 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் உண்டாகும். வாழ்கை துணை உடன் நேரம் செலவிடுவீர்கள். சிலர் குடும்பத்தினர் உடன் சுற்றுலா செல்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்மைகள் மிகுந்த நாள். சிலருக்கு வேலை மற்றும் படிப்புகாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். காதல் துணை உடன் மகிழ்ச்சி சிறக்கும். பண விவகாரங்களில் உள்ள சவால்களை சமாளிப்பீர்கள். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட்டு மகிழ்வீர்கள். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல்கள் உண்டாகும். நண்பர்களிடம் இருந்து பண உதவிகளை பெறுவீர்கள். அலுவலகத்தில் திட்டமிட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். தாய் மற்றும் தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. மகிழ்ச்சியாக செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்மைகள் மிகுந்து இருக்கும். திருமணம் அல்லது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தேர்வுகளுக்கு சிறப்பாக செயல்படுவீர்கள். 

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் பழைய முதலீடுகளால் ஆதாயம் அடைவீர்கள். அலுவலக நேரத்தில் தேவையான அனைத்து விதிகளையும் பின்பற்றவும். ஆரோக்கியமாக இருக்க, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இன்று குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டிய நாள். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உயரதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். இந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக செயல்படுவீர்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner