Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.26 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 26ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 26 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்த நாள். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாய் வழியில் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகள் உண்டாகும். நம்பிக்கை குறைவு ஏற்படும். பொறுமையாக இருங்கள். தொழிலில் முதலீடு செய்யலாம். தொழில் விஷயமாக வெளியூர் பயணம் உண்டாகும். பணியிடங்களில் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முழு நம்பிக்கை உடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும். அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் இந்த நாளில் மகிழ்ச்சி உடன் இருப்பீர்கள். சில நேரங்களில் தன்னம்பிக்கை குறைவு ஏற்படலாம். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாபம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு சில சிக்கல்கள் தடங்கள்கள் உண்டாகலாம். சில நேரங்களில் நம்பிக்கை குறைவு ஏற்படும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பழைய நண்பர்களை சந்தித்து பேசுவீர்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சற்று பணிச்சுமைகள் நிறைந்ததாக இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையில்லாத கோபத்தை தவிர்க்கவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகன வசதியில் குறைவு ஏற்படலாம். முன்னேற்ற பாதை அமையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.