Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.21 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.21 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.21 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 20, 2024 02:49 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 21ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.21 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.21 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் மீண்டும் கிடைக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிலம், கட்டிடம், வாகனம் வாங்கலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயமும் உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். முதலீடு தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம்.  வாக்குவாதம் செய்வதை தவிருங்கள். சிலர் மீது நீதிமன்ற வழக்குகள் பதியப்படலாம். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பரின் உதவியால் வருமானம் கிடைக்கும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வெளியில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் தீரும். பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் பெருகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலையில் பிஸியாக இருப்பதால் குடும்பத்திற்கு நேரம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். வேலை நேர்காணல் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணவரவு மகிழ்ச்சியை தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படலாம். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சலசலப்பு அதிகமாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் கவனமாக இருங்கள், இல்லையெனில் வாழ்கை துணை உடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை முதலீடு செய்வதைத் தள்ளிப் போடுங்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Whats_app_banner