Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.20 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.20 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.20 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 19, 2024 02:49 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.20 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.20 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், நன்மைகளும் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் செயல்பாடுகளுக்கு மனைவி ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்துடன் பொழுதுபோக்கும் இடங்களுக்கு செல்வீர்கள். காதல் வாழ்க்கை மேம்படும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்றைய நாளை எச்சரிக்கையுடன் கழிக்க வேண்டும். சூழ்நிலைகள் பாதகமானவை. எந்த விதமான ரிஸ்க்களையும் எடுக்க வேண்டாம். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் சண்டை வரலாம். பயணங்களில் லாபத்திற்கான அறிகுறிகள் உள்ளன. புதிய நபர்கள் உடனான அறிமுகத்தில் கவனம் தேவை. பழைய முதலீடுகளை உன்னிப்பாக கவனியுங்கள். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வருமான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும், மரியாதையும் கூடும். உயர் அதிகாரிகள் நன்மதிப்பை தருவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தில் செலவிடுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சமூகம் மற்றும் குடும்பத்தில் செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும் நாள். நேர்மறை சிந்தனை உடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து பரிசுப் பொருட்களை பெறுவீர்கள். முழு நம்பிக்கை உடன் செயல்பட்டு மகிழ்வீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், அதனால் நஷ்டம் ஏற்படலாம்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் படிப்பில் கவனமாக படிப்பார்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு திட்டமிடுதல் அவசியம். அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மனைவியுடன் வெளியில் செல்வீர்கள். 

மீனம் 

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த நல்ல நாளாக இருக்கும். உங்கள் அறிவுத்திறன் பலரால் பாராட்டப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மனைவி ஆதரவாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner