Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே நாளை ஜன.25 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே நாளை ஜன.25 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே நாளை ஜன.25 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2025 02:51 PM IST

Rasipalan : ஜனவரி 25, 2025 அன்று துலாம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். மேஷம் முதல் கன்னி வரையிலான நிலையைப் படியுங்கள்.

Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே நாளை ஜன.25 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே நாளை ஜன.25 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளை மனதில் குழப்பம் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். மேலும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாளை தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும், ஆனால் மனதில் குழப்பம் ஏற்படலாம். அதே சமயம் வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். கட்டிட வசதியில் அதிகரிப்பு இருக்கலாம். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம்.

தனுசு 

தனுசு ராசிக்காரர்களே நாளை உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கும், ஆனால் மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். எதிரிகள் மீது வெற்றி உண்டாகும். நீங்கள் ஒரு நண்பரை சந்திக்கலாம். நண்பரின் உதவியால் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளை உருவாக்கலாம்.

மகரம் 

மகர ராசிக்கார்களே நாளை உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கும், ஆனால் மனமும் கலக்கமடையும். ஆனால் நீங்கள் நாளை முடிந்தவரை சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அதே சமயம் தேவையற்ற கோபத்தை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். நாளை வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்கார்களே நாளை  நம்பிக்கை குறைவு ஏற்படும். மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால் நாளை உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உரையாடலில் பொறுமையாக இருங்கள். தாயின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். வருமானம் அதிகரிக்கும்.

மீனம் 

மீன ராசிக்காரர்களே நாளை மனதில் குழப்பம் இருக்கும். அதேசமயம் நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் அமைதி காக்க முயற்சி செய்யுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகன வசதி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்