Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 30, 2024 03:38 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 01ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.01 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மேம்படும். வாழ்க்கையில் புதிய ஆச்சரியங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை புரிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் லாபம் பெருகும். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் ஆலோசனை இன்றி புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். பணம் சார்ந்த விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆலோசனை முக்கியம். இந்த நாளின் சவால்களை அமைதியாகவும், சாமர்த்தியமாகவும் சந்திப்பீர்கள். இராஜதந்திரமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்கள் வளர்ச்சியை பார்த்து பெற்றோர் பெருமைபடுவார். 

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் முதலீடு நன்மைகள் தரும். ஆனால் புதிய முதலீடுகள் மிக கவனமாக இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். கடனில் இருந்து விடுதலை பெறுவீர்கள். கோபத்தைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை அமைதியான மனதுடன் தீர்க்கவும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வானிலை மாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்படலாம். காதல் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். வாழ்கை துணை ஆதரவாக இருப்பார்கள். 

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த இலக்குகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். தொழில் வாழ்க்கையில் புதிய திட்டத்தை தீட்டுவீர்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner