விருச்சிகத்தில் புதன் உடன் சேரும் சூரியன்! வீடு, வாகனம், வண்டிகளை வாங்கும் 4 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  விருச்சிகத்தில் புதன் உடன் சேரும் சூரியன்! வீடு, வாகனம், வண்டிகளை வாங்கும் 4 ராசிகள்!

விருச்சிகத்தில் புதன் உடன் சேரும் சூரியன்! வீடு, வாகனம், வண்டிகளை வாங்கும் 4 ராசிகள்!

Kathiravan V HT Tamil
Nov 13, 2024 02:49 PM IST

வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை 7.41 மணிக்கு அன்று சூரிய பகவான் ஆனவர் செவ்வாய் பகவானுக்கு உரிய விருச்சிகம் ராசியில் நுழைய உள்ளார். இந்த சேர்க்கை அடுத்து வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை இருக்கும்.

விருச்சிகத்தில் புதன் உடன் சேரும் சூரியன்! வீடு, வாகனம், வண்டிகளை வாங்கும் 4 ராசிகள்!
விருச்சிகத்தில் புதன் உடன் சேரும் சூரியன்! வீடு, வாகனம், வண்டிகளை வாங்கும் 4 ராசிகள்!

வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை 7.41 மணிக்கு அன்று சூரிய பகவான் ஆனவர் செவ்வாய் பகவானுக்கு உரிய விருச்சிகம் ராசியில் நுழைய உள்ளார். இந்த சேர்க்கை அடுத்து வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை இருக்கும். விருச்சிகம் ராசியில் ஏற்கெனவே உள்ள புதன் உடன் சூரியனின் சேர்க்கை உண்டாக உள்ளது. சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை சில ராசிகளில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். புதன்-சூரியனின் சேர்க்கை மூன்று ராசிகளுக்கும் மிகவும் சுபகரமானதாகவும் நன்மை பயப்பதாகவும் இருக்கும்.  

சூரியன் - புதன் சேர்க்கையால் நன்மைகளை பெறும் ராசிகள்

துலாம்

சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை உண்டாக்கும். நீண்டநாட்களாக இருந்த பணம் சார்ந்த பிரச்னைகள் தீரும். பணியிடங்களில் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானத்தில் உயர்வு உண்டாகும்.

விருச்சிகம் 

விருச்சிகம் ராசியில் உண்டாகும் சூரியன் - புதன் சேர்க்கை மிகுந்த நன்மைகளை கொண்டு வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் மீண்டும் கிடைக்கும். புதிய வேலைகளை தொடங்க இது நல்லகாலமாக இருக்கும். உடல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மகரம் 

மகரம் ராசிக்காரர்களுக்கு சூரியம் - புதன் சேர்க்கை நற்பலன்களை உண்டாக்கும். நிலம், வீடு, வாகனங்களை வாங்குவீர்கள். பெற்றோரின் ஆதரவு நிதி நன்மைகளுக்கு வழிவகுக்கும். வியாபாரிகளுக்கு புதிய வியாபார வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

கும்பம் 

கும்பம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உண்டாகும். உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியாக ஏற்றம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner