Tamil News  /  Astrology  /  Rasi Palan For Febraury Month Read More Details To Know

Rasi Palan: பிப்ரவரியில் காதல் கைகூடும் யோகமுள்ள ராசிக்காரர்கள்!

Manigandan K T HT Tamil
Jan 31, 2024 07:16 PM IST

சூரியன்-சந்திரனோடு சேர்ந்து செயல்பட போகிறார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.

பிப்ரவரியில் காதல் கைகூடும் ராசிக்காரர்கள்
பிப்ரவரியில் காதல் கைகூடும் ராசிக்காரர்கள் (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் ராகுவின் நட்சத்திரம் கடக்கும்போது கண்டிப்பாக அரசியலில் இருப்பவர்களுக்கு பெயர் கெடக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது, ஒரு சிலருக்கு பதவி உயர்வு இருக்கும்.

ஒரு சிலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்படுவார்கள். நிறைய பேருக்கு வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.20ம் தேதி மகரத்திலிருந்து கும்பத்திற்கு புதன் மாறுகிறார்.

இதனால், அறிவு சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு யோகம் இருக்கும்.

மேஷ ராசி

சனியும் சூர்யனும் சேருவதால் கால் மூட்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களை பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய ஆட்களின் சகவாசம் எளிதாக கிடைக்கும். சுபகாரியங்கள் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு நன்மை பயக்கும்.

ரிஷப ராசி

குரு, சுக்கிரனுடைய நட்சத்திரத்தில் செல்வதால், விரயச் செலவுகள் நிறைய இருக்கும். ஆன்மிக பயணங்கள் செல்வீர்கள்.

நினைத்த காரியங்கள் கைகூடும் ராசிக்காரர் நீங்கள் தான்.

மிதுனம்

அஷ்டமத்தில் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து இருக்கிறார்கள். ஜுரம் வர வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்துக்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். காதல் கைகூடும். முன்னோர் வழிபாடுகள் சிறந்து இருக்கும்.

பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள், ஆண்களுக்கு கழிவுகளை வெளியேற்றும் இடங்களில் பிரச்சனைகளை கொடுக்கும். நிறைய பேருக்கு விசா கிடைத்து வெளிநாட்டுக்கு செல்வீர்கள்.

கடக ராசி

கடக ராசி நபர்கள், அஷ்டமத்துல சனி. வீட்டில் உள்ள பெரியவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். புதி வியாபாரம் சிறந்து விளங்கும். மக்கள் தொடர்பு அதிகம் ஏற்படும். வாழ்க்கை துணை மூலமாக பணம் வரும். கால பைரவருக்கு நெய் விளக்கு ஏற்றினால் நல்லது நடக்கும்.

சிம்ம ராசி

புதன் மகர ராசியிலிருந்து 20ம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சூரியன்-சந்திரனோடு சேர்ந்து செயல்பட போகிறார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.

கன்னி ராசி

கோர்ட் வழக்குகள் நிவர்த்தி ஆகும். விவாகரத்து கிடைக்கும். புது தம்பதியாக உருவாகக் கூடிய வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைக்கும். காதல் கைகூடும். சுபகாரியங்கள் நடக்கும்.

துலாம் ராசி

பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். அறிவுரை கூறக்கூடிய தொழில் சிறந்து விளங்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தை கொடுக்கும்.

விருச்சிக ராசி

ஆண் குழந்தை வாரிசாக கிடைக்கும். புது முதலீடு வாய்ப்பு கிடைக்கும். லாபத்தை கொடுக்கக் கூடிய நேரம்.

தனுசு ராசி

சுக்ரனும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால் மாறி மாறி பேசுவீர்கள். வியாபாரம் சிறந்து விளங்கும். தங்கம்-வெள்ளி வாங்குவீர்கள். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும்.

மகரம்

பொருளாதாரத்தில் ஏற்றம் கிடைக்கும். திடீரென பண வரவு கிடைக்கும். பெயர் கெடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கும்.

கும்பம்

வியாபார சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிவர்த்தி பெறும். நிறைய பயணம் செய்வீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மீனம்

வேலைகளில் மாற்றம் வரும். மன நோயைக் கொடுக்கும் பெரியவர்களால் பிரச்சனை வரலாம். இடமாற்றத்தினால் பிரச்சனை வரலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்