Today Rashi Palan (03.09.2024): இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை அதிர்ஷ்டம் யாருக்கு?..12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 03) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
தன வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களால் அலைச்சல் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
பேச்சுத் திறமைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். அரசு துறைகளில் நெருக்கடிகள் குறையும்.
மிதுனம்
மனதில் நினைத்த நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். முயற்சிக்கு உண்டான மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கடகம்
முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
சிம்மம்
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். நண்பர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.குழப்பங்கள் படிப்படியாக குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.
கன்னி
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார போட்டிகளை ஓரளவு சமாளிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
துலாம்
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் அமைதி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்கு மேம்படும்.
தனுசு
பழைய பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். கடன் முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும்.
மகரம்
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடத்தில் கோபப்படுவதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும்.
கும்பம்
சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும்.
மீனம்
உறவினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வர்த்தகப் பணிகளில் லாபம் கிடைக்கும்.
டாபிக்ஸ்