Today Rashi Palan (02.09.2024): இன்று நாள் எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள்!
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 02) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.
ரிஷபம்
உறவினர்களின் வருகையால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்
மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தன வரவுகள் மேம்படும். பழைய பிரச்சனைகள் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் பலிதமாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்
சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும்.
கன்னி
அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.
துலாம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். தன வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு
நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வாழ்க்கை துணைவரால் ஆதாயம் உண்டாகும்.
மகரம்
உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கும்பம்
வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு உண்டாகும்.
மீனம்
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள்.
டாபிக்ஸ்