NAGANATHA SWAMY: பேச முடியாத இஸ்லாமிய குழந்தை.. பேச வைத்த சிவபெருமான்.. சாபம் கொடுத்த முனிவர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Naganatha Swamy: பேச முடியாத இஸ்லாமிய குழந்தை.. பேச வைத்த சிவபெருமான்.. சாபம் கொடுத்த முனிவர்

NAGANATHA SWAMY: பேச முடியாத இஸ்லாமிய குழந்தை.. பேச வைத்த சிவபெருமான்.. சாபம் கொடுத்த முனிவர்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 24, 2024 06:00 AM IST

Naganatha Swamy: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் நாயனார் கோயில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகநாதர் எனவும் தாயார் சௌந்தரநாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Naganatha Swamy: பேச முடியாத இஸ்லாமிய குழந்தை.. பேச வைத்த சிவபெருமான்.. சாபம் கொடுத்த முனிவர்
Naganatha Swamy: பேச முடியாத இஸ்லாமிய குழந்தை.. பேச வைத்த சிவபெருமான்.. சாபம் கொடுத்த முனிவர்

இது போன்ற போட்டோக்கள்

காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ கோயில்கள் நம் இந்திய நாட்டில் இருந்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் குலதெய்வமாக மன்னர்களுக்கு சிவபெருமான் விளங்கி வந்துள்ளார் மன்னர்கள் மட்டுமல்லாத அனைத்து மக்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் வழங்கி வந்துள்ளார்.

சிவபெருமானை ஆதி கடவுளாக என்றும் பல மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு தங்களை நிலைநாட்டி வந்தாலும் ஒரு பக்கம் கலை நயத்தோடு தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கம்பீரமான கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

இன்றுவரை சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்கள் எப்படி கட்டி இருப்பார்கள் என்று இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த அளவிற்கு அந்த காலத்திலேயே தொழில்நுட்பம் இல்லாமல் வரலாற்று சரித்திர குறியீடாக பல சிலைகளை செதுக்கி அந்த கோயிலின் ஆதி நாயகனாக சிவபெருமானை வைத்து விட்டு சென்றுள்ளன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் நாயனார் கோயில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகநாதர் எனவும் தாயார் சௌந்தரநாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

உலகில் சிவபெருமானுக்கு எத்தனையோ கோயில்கள் உள்ளன 1008 சிவபெருமான் கோயில்கள் மிகவும் தெய்வத்தன்மை கொண்ட கோயில்களாக திகழ்ந்து வருகின்றன. அந்த 1008 கோயில்களும் சிவபெருமானின் அங்கமாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட அங்கங்களில் ஒன்றாக இந்த நாகநாதர் திருக்கோயில் விளங்கி வருகின்றது. இது சிவபெருமானின் இதயமாக கருதப்படுகிறது.

முகலாய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் முல்லா ஷாகிப் என்பவர் இங்கே வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய மகனுக்கு சிறு வயதில் இருந்தே பேச்சு வராமல் இருந்துள்ளது. அப்போது இங்கே வீட்டில் இருக்கக்கூடிய நாகநாதரை வழிபட்டால் சிக்கல்கள் தீரும் என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதனால் மருத மரங்கள் நிறைந்து இருக்கக்கூடிய காட்டுப்பகுதி வழியே சென்று அங்கு இருந்த வாசுகி தீர்த்தத்தில் முல்லா ஷாகிப் மற்றும் அவரது மகள் நீராடியுள்ளனர். எங்கும் தீராத அந்த மகளின் சிக்கல் தீர்த்தத்தில் குளித்து வெளியே வந்த பிறகு நயினார் என சத்தமாக கத்தியுள்ளார். ஒரு இஸ்லாமிய சிறுமிக்கு பேசும் திறனை கொடுத்தவர் இந்த நாகநாதர் தான்.

நயினார் என்றால் தலைவர் என்று பொருள் சிறுமி நயினார் என்று கட்டிய காரணத்தினால் அந்த ஊருக்கு நயினார் கோயில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சௌந்தரநாயகி தாயாரை வழிபட்டால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

திரிசங்கு என்கின்ற மன்னன் சூர்ய வம்சத்தில் பிறந்தவன். வயது முதிர்ந்த காரணத்தினால் இவர் அரச பதவியை விட்டு விலகினார். அதேசமயம் ஒரே நாளில் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டார். தனக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்று கூறி வசிஷ்ட முனிவரிடம் கூறினார். ஒரே நாளில் நீ சொர்க்கம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஆண்டு முழுவதும் யாகம் செய்ய வேண்டும் என கூறினார்.

இதை அவர் ஏற்காத காரணத்தினால் தன்னை மதிக்காத திரிசங்கு மன்னனை புலையனாகப் போகும்படி வசிஷ்டர் சபித்துவிட்டார். இந்த சாபத்தை நீக்குவதற்காக வசிஷ்ட முனிவரின் விரோதியான விசுவாமித்திரரை மன்னர் அணுகினார். நமச்சிவாய மந்திரத்தை மனப்பூர்வமாக ஜெபிப்பதன் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதேசமயம் யாகம் ஒன்று செய்தால் நீ நேரடியாக சொர்க்கத்தை அடையலாம் அதற்கு நான் உறுதுணையாக இருக்கிறேன் என உறுதி அளித்துள்ளார். நெல்லிக்காய் நார்மல் இல்லாமல் சாப்பிடக்கூடாது.

இந்த யாகத்தை நடத்த வேண்டி வசிஷ்டரின் ஆயிரம் மகன்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சாபம் பெற்ற ஒருவருக்கு யாகம் நடத்த முடியாது என அவர்கள் கூறிவிட்டனர். இதனால் விசுவாமித்திரர் எனது கருத்தை மதிக்காத அனைவரும் வேடர்களாக மாறும்படி சபித்து விட்டார். அவரிடம் அனைவரும் சேர்ந்து சாப விமோசனம் கேட்டனர்.

அதன்பின்னர் தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய மருதூர் காட்டில் சிவபூஜை செய்தால் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதன்படி அந்த காட்டில் இருந்த புனித திருத்தத்தில் நீராடி நாகநாதரை வணங்கி அனைவரும் சாப விமோசனம் பெற்றனர். அதற்குப் பிறகு சௌந்தரநாயகி அம்பாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner