தமிழ் செய்திகள்  /  Astrology  /  Rajayogam: Features Of Raja Yoga In Horoscope

Rajayogam: மேஷம் முதல் மீனம் வரை! பணம் கொட்டும் ராஜயோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Jan 28, 2024 09:29 AM IST

“Rajayogam: இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதலமைச்சர், கவர்னர், பிரதமர் என்பது போன்ற உச்சகட்ட பதவிகளை இந்த யோகம் குறிக்கிறது”

ராஜயோகம்
ராஜயோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜயோகம் என்பது ஒருவருக்கு அரசியல், அதிகாரம், செல்வம் மற்றும் புகழ் போன்றவற்றை அளிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

ஒருவரது ஜாதகத்தில் ராஜயோகம் அமைந்துவிட்டால் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாமல் இருப்பவர்களை கூட அரசனாக்கி சென்றுவிடும் தன்மை கொண்டது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  

இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதலமைச்சர், கவர்னர், பிரதமர் என்பது போன்ற உச்சகட்ட பதவிகளை இந்த யோகம் குறிக்கிறது. 

ஒருவரது ஜாதகத்தில் 2, 9, 11 ஆம் பாவாதிபதிகள் சந்திரனுக்கு 1, 4, 7, 10 எனப்படும் கேந்திரத்தில் இருக்க, குரு 5, 11ஆம் பாவாதிபதியாகி 2ஆம் இடத்தில் இருக்க ராஜயோகம் உண்டாகும். 

அதே போல் குரு பகவான் ஆனவர் 2, 5, 11ஆம் இடத்தில் இருக்க, குரு நின்ற வீட்டின் அதிபதி, சந்திரனுக்கு 1, 4, 7, 10, 5, 9 ஆகிய ஏதோ ஓரிடத்தில் இருக்க ராஜயோகம் ஏற்படும். 

லக்கினம் ஸ்திர ராசியில் இருந்து ஒன்பதாம் வீட்டு அதிபதி பலமடைந்து சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் குரு பதினொன்றாம் வீட்டு அதிபதியாக இருந்தாலும் இந்த யோகம் உண்டாகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த யோகத்திற்கு சொந்தக்காரர்தான். 

ராஜ யோகத்தின் பலனாக உங்களுக்கு மற்றவர்களையும் அவர்களது விஷயங்களையும் ஆட்சி செலுத்துவதற்குள்ள அதிகாரங்களை கொடுக்கிறது. 

பெண்களாக இருந்தால் கணவரும் அவரது நண்பர்களும் உங்களுக்கு முறையான மதிப்பை தருவார்கள். திருமணமான வீட்டில் அரசியாக வாழ்வார்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மிக்க பதவி கிடைக்கும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்