தமிழ் செய்திகள்  /  Astrology  /  Rahu-mercury Conjunction In Pisces And Signs That Are Going To Explode

Rahu-Mercury: மீன ராசியில் ராகு - புதன் இணைவு: தூள்கிளப்பப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 21, 2024 11:01 PM IST

ராகுவும் புதனும் மீன ராசியில் சஞ்சரிப்பதால் சில ராசியினர் அதிர்ஷ்டம்பெறுகின்றனர்.

மீன ராசி.
மீன ராசி.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ராகு மற்றும் புதன் இணைவால் மகிழ்ச்சியைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால் குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பணியில் சக அலுவலர்களிடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். நீங்கள் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபத்தைப் பெறும் காலம் இது.

கடகம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால், கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனதுக்கு வலுதரும் நல்ல பயணங்களைப் புரிவீர்கள். எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். புதிய வியாபாரம் மற்றும் முதலீட்டை அதிகப்படுத்தினால் நன்மை கிட்டும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால்,வெகுநாட்களாகத் திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் கைகூடும். கடனை அடைப்பீர்கள். தன்னம்பிக்கை கூடுவதால், செய்யும் வேலையைத் தெளிவாக செய்வீர்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு சேர்க்கையால், கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை நீங்கும். பகட்டு வாழ்க்கைக்காக பணத்தைச் செலவழித்துவிட்டு பின் வருத்தப்படுவீர்கள். எதையும் நிதானத்துடன் செய்தால் நல்ல பதவி வந்துசேரும். திறமையை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றியைப் பெறுவீர்கள்.

மீனம்: இந்த ராசியினருக்கு புதன் - ராகு இணைவால் பணித்திறன் கூடும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வெகுநாட்களாக கனவுகண்டதைக் கையில் பெறுவீர்கள். எதிரிகளின் உள்ளடிகளைத் தடுத்து நிறுத்துவீர்கள். பணி வாழ்வும் தொழில் வாழ்வும் சமமாக வளம் பெறும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்