Rahu Ketu Peyarchi 2025: ’விருச்சகம் ராசி நேயர்களே! இடம் மாறினால் ஏற்றம் பிறக்கும்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu Peyarchi 2025: ’விருச்சகம் ராசி நேயர்களே! இடம் மாறினால் ஏற்றம் பிறக்கும்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Rahu Ketu Peyarchi 2025: ’விருச்சகம் ராசி நேயர்களே! இடம் மாறினால் ஏற்றம் பிறக்கும்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Jan 17, 2025 07:52 PM IST

படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. வீடு, நிலம், வண்டி, ஆபரண சேர்க்கை உண்டாகும். தாயாரில் உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்கு தாயார் உடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தசாபுத்தி சிறப்பாக இருப்பவர்களுக்கு திருமணமும், புத்திரபாக்கியமும் கைக்கூடும்.

Rahu Ketu Peyarchi 2025: ’விருச்சகம் ராசி நேயர்களே! இடம் மாறினால் ஏற்றம் பிறக்கும்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
Rahu Ketu Peyarchi 2025: ’விருச்சகம் ராசி நேயர்களே! இடம் மாறினால் ஏற்றம் பிறக்கும்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

இடமாற்றத்தால் ஏற்றம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உண்டாகும். பணியிடங்களில் அழுத்தங்கள் கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உடன் கருத்து முரண்பாடுகள் உண்டாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழிலில் இருந்து ஓரளவு வருமானம் கிடைக்கும். ஆனால் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும் என்றாலும் ஏதேனும் சில பாதிப்புகள் தொடரும். உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. 

கவனச்சிதறல்கள் வரலாம்!

மாணவர்களுக்கு கவனச்சிதறல் உண்டாகும். விளையாட்டுத் தன்மை கூடும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. வீடு, நிலம், வண்டி, ஆபரண சேர்க்கை உண்டாகும். தாயாரில் உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்கு தாயார் உடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தசாபுத்தி சிறப்பாக இருப்பவர்களுக்கு திருமணமும், புத்திரபாக்கியமும் கைக்கூடும். விநாயகர் வழிபாடு வினைகளை தீர்த்து நன்மைகளை உண்டாக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner