Rahu Ketu Peyarchi Palangal 2025: ’மனைவியிடம் சரண்டர் ஆனால் சங்கடங்கள் வராது!’ மகரம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu Peyarchi Palangal 2025: ’மனைவியிடம் சரண்டர் ஆனால் சங்கடங்கள் வராது!’ மகரம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்!

Rahu Ketu Peyarchi Palangal 2025: ’மனைவியிடம் சரண்டர் ஆனால் சங்கடங்கள் வராது!’ மகரம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்!

Kathiravan V HT Tamil
Jan 17, 2025 07:34 PM IST

மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு பகவனும், 8ஆம் வீட்டில் கேது பகவானும் இடபெயர உள்ளனர். வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும்.

Rahu Ketu Peyarchi Palangal 2025: ’மனைவியிடம் சரண்டர் ஆனால் சங்கடங்கள் வராது!’ மகரம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்!
Rahu Ketu Peyarchi Palangal 2025: ’மனைவியிடம் சரண்டர் ஆனால் சங்கடங்கள் வராது!’ மகரம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்!

2இல் ராகு! 8இல் கேது!

மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு பகவனும், 8ஆம் வீட்டில் கேது பகவானும் இடபெயர உள்ளனர். வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும். 

தொழில் வளர்ச்சி!

பேச்சு, தொழில்நுட்பம், ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வருமானமும் கிடைக்கும். குடும்ப உறவுகளிடம் இருந்து பணவரவு இருக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல நல்ல காலகட்டம் இது. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு உடல் நிலை சரியாகும். சீர்கெட்ட ஆரோக்கியம் மேம்படும். 

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த மண்ணை விட்டு வெளியிடங்களில் வேலை தேடினால் நன்மைகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தேக்கநிலை மாற்றி முன்னேற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்தில் வேறு வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகும். 

பேச்சில் எச்சரிக்கை தேவை!

அதே வேலையில் பேச்சில் கவனம் தேவை. உறவுகளிடமும், தொழில் செய்யும் இடத்திலும் பேச்சில் பொறுமையும் எச்சரிக்கையும் தேவை. இல்லை எனில் பெரும் பிரச்னைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வீண் பேச்சால் குடும்பத்திலும், வெளியிடத்திலும் சிக்கல்கள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சில சிக்கல்கள் உண்டாகலாம். இந்த நேரத்தில் பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்ப உறவுகளில் யாரேனும் ஒருவருக்கு உடல்நிலை கோளாறு வரலாம். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner