Rahu Transit: 18 மாதத்துக்கு பிறகு ராசி மாறும் ராகு.. செல்வம் அதிகரிப்பு, நிதி நிலை உயர்வை பெற பொகும் மூன்று ராசிகள்
ராகு பாகவான் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு இந்த வருடத்தில், ராசி மாற போகிறார். கும்ப ராசியில் ராகு பகவான் சஞ்சாரிக்க இருக்கும் நிலையில், யாருக்கெல்லாம் நல்ல காலம் அமைகிறது என்பதை பார்க்கலாம். நிதி நிலையில் உயர்வு, செல்வம் அதிகரிக்க போகும் ராசிகள் எவையெல்லாம் என தெரிந்து கொள்ளலாம்

ஜோதிடத்தில் ராகுவின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு மெதுவான வேகத்தில் சஞ்சரிக்கிறார். இந்த வருடம், ராகு சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ராசி மாறப் போகிறார். தற்போது, ராகு குருவின் மீன ராசியில் இருந்து வருகிறார். மே மாதத்தில், ராகு சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
ராகு பகவான்
நவகிரகங்களில் அஸ்பநாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடி ராகு பகவான், சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்குகிறார்.
ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகிறார்கள். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.
அந்த வகையில் ராகு பகவான் கடந்த 2023 அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்த ராகு, வரும் மே மாதம் கும்ப ராசியில் இடத்தை மாற்றுகிறார்.
ஜோதிடக் கணக்கீடுகள் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, மே 18 அன்று மாலையில் ராகு கும்ப ராசியில் நுழைகிறார். கும்ப ராசியில் ராகுவின் சஞ்சாரம் சிலருக்கு நன்மையும், சிலருக்கு பிரச்னைகளையும் உருவாக்கலாம். குருவின் ராசியான கும்பத்தில் ராகு பகவான் பெயர்ச்சியால் நன்மை பெற போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கும்ப ராசியில் ராகுவின் சஞ்சாரத்தால் நன்மை அடைவார்கள். சட்ட விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சொத்தில் செய்யப்படும் எந்தவொரு பழைய முதலீடும் உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். வேலை தொடர்பாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: பணத்தை அள்ளி வீசும் ராகு.. பணமழையில் நனையப்போகும் ராசிகள்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் கும்ப ராசிப் பெயர்ச்சி மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் மூதாதையர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். ராகுவின் அருளால், சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும். தொழில் விஷயங்களில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்னைகளும் படிப்படியாக நீங்கத் தொடங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகுவின் கும்ப ராசிப் பெயர்ச்சி நன்மை பயக்கும். பல வருடங்களாக நிலுவையில் இருந்த உங்கள் வேலை முடிக்கப்படலாம். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. தாயின் உடல்நலம் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதே நேரத்தில், இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் நல்ல நேரமாக கருதப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது

டாபிக்ஸ்