கோடி கோடிகளாக கொட்ட வரும் கேது.. நிழல் கிரக யோகத்தை பெறுகின்ற ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கோடி கோடிகளாக கொட்ட வரும் கேது.. நிழல் கிரக யோகத்தை பெறுகின்ற ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

கோடி கோடிகளாக கொட்ட வரும் கேது.. நிழல் கிரக யோகத்தை பெறுகின்ற ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 04:50 PM IST

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து வந்து காணலாம்.

கோடி கோடிகளாக கொட்ட வரும் கேது.. நிழல் கிரக யோகத்தை பெறுகின்ற ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
கோடி கோடிகளாக கொட்ட வரும் கேது.. நிழல் கிரக யோகத்தை பெறுகின்ற ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். கேது தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக் கூடியவர். கேது பகவானின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் வருகின்ற மே 18ஆம் தேதி அன்று கேது பகவான் சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து வந்து காணலாம்.

ரிஷப ராசி

மே மாதம் கேது பகவான் பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து திட்டங்களும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்ம ராசி

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் லக்ன வீட்டில் கேது பயணம் செய்கின்ற காரணத்தினால் தொழில் வாக்கை மிகவும் முன்னேற்றமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆளுமைத் திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் உங்களுக்கு அபரிமிதமான முன்னேற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் கேது பயணம் செய்ய போகின்றார். தொழில் மற்றும் வேலையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

வியாபாரத்தை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.