’ராகு கேதுவால் ஜெகத்தை ஆளபோகும் சிம்மம் ராசி!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!
சிம்மம் ராசியின் அதிபதியான சூரியன் தரும் பலன்களை இந்த கிரக பெயர்ச்சி நடத்தி தரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு, பதவி பெறும் காலம் தேடி வர போகிறது. ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பாசம் கூடும். அலுவலகங்களில் தலைமை பொறுப்புகள் தேடி வரும்.
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.
சிம்மம் ராசியின் அதிபதியான சூரியன் தரும் பலன்களை இந்த கிரக பெயர்ச்சி நடத்தி தரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு, பதவி பெறும் காலம் தேடி வர போகிறது. ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பாசம் கூடும். அலுவலகங்களில் தலைமை பொறுப்புகள் தேடி வரும். தடை பட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு மீண்டும் கிடைக்கும். சொந்தபந்தங்கள் உடன் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். தாய் வழி சொந்தங்கள் உடனான உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.
சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய உயர் பொறுப்புகள் கிடைக்கும்.
7ஆம் இட ராகுவால் மனைவி மூலம் வருமானம் பெறுகும். வாழ்கை துணை உடன் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும். மனைவி வழியில் சொத்துக்கள் கிடைக்கும்.
மகம் நட்சத்திரத்திற்கு கேது பகவான் வரும் காலம் பெறும் திருப்புமுனையை கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை, தைரியம் கூடும். மறைமுக வருமானம் மூலம் செல்வம் சேரும். வெளியூர் பயணங்கள் அதிகம் செய்ய வேண்டி வரும். ஆன்மீக பயணங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் கூடும். சங்கடங்களில் ஆழ்த்திய சிக்கல்களில் இருந்து வெளியே வருவீர்கள். வாழ்கை துணைக்கு இருந்து வந்த நோய் பாதிப்புகள் தீரும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.