’கன்னி ராசிக்கு மனக்குழப்பம் தீருது! மாற்றம் பிறக்குது!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’கன்னி ராசிக்கு மனக்குழப்பம் தீருது! மாற்றம் பிறக்குது!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!

’கன்னி ராசிக்கு மனக்குழப்பம் தீருது! மாற்றம் பிறக்குது!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!

Kathiravan V HT Tamil
Nov 19, 2024 05:03 PM IST

கன்னி ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்னைகளில் இருந்து வெளியே வரும் தன்மைகளை வரும் ராகு கேது பெயர்ச்சி உண்டாக்க போகின்றது. அதே வேளையில் இரவு தூக்கத்திலும், உடல்நலனிலும் கன்னி ராசிக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

’கன்னி ராசிக்கு மனக்குழப்பம் தீருது! மாற்றம் பிறக்குது!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!
’கன்னி ராசிக்கு மனக்குழப்பம் தீருது! மாற்றம் பிறக்குது!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!

மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.

கன்னி ராசி 

கன்னி ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்னைகளில் இருந்து வெளியே வரும் தன்மைகளை  வரும் ராகு கேது பெயர்ச்சி உண்டாக்க போகின்றது. அதே வேளையில் இரவு தூக்கத்திலும், உடல்நலனிலும் கன்னி ராசிக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இடமாற்றம், வீடுமாற்றம், மனை மாற்றத்தை இந்த கிரக பெயர்ச்சி உண்டாக்கி தரும். வேலைகளில் தொந்தரவை அனுபவித்து வந்த கன்னி ராசிக்காரர்களுக்கு மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் உடன் இருந்து வந்த பிணக்குகள் தீரும். 

பங்குசந்தை நஷ்டங்கள் முடிவுக்கு வரும். சனி பார்வை படுவதால் சிலர் வீடு மற்றும் ஊர்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி வரும். சொத்து சார்ந்த வம்பு, வழக்குகள் தீரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கூடும். பகைவர்கள் உங்களை கண்டு அஞ்சுவர். அமைதியாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். வேலை சார்ந்த விஷயங்களில் இருந்த போட்டி மற்றும் பொறாமைகள் அகலும். மாத சம்பளம் வாங்குபவர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு புதிய தொழில்களை தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் சங்கடங்களை சந்தித்தவர்கள் சொந்த முதலீட்டில் தனியாக தொழில் தொடங்குவீர்கள். 

வேற்று மொழி பேசும் நபர்களால் ஆதாயமும், பணவரவும் கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்கை மகிழ்ச்சி தரும். சிலருக்கு காதல் திருமணம் கைக்கூடும். சிலர் புதிய வீடுகளை கட்டி குடிபுகுவீர்கள். வங்கி கடன் கிடைக்கும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.  ஏற்கெனவே செய்து வரும் தொழில்களை விரிவு செய்வீர்கள். தேவையில்லாமல் மனதில் இருந்த மனக்குழப்பங்கள் தீரும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner