தமிழ் செய்திகள்  /  Astrology  /  Rahu Ketu Activities Will Give Fortune To Major Zodiac Signs

Rahu Ketu: மாற்றம் பெற போகும் ராசிகள்.. ராகு கேது மாறிவிட்டனர்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 05:36 PM IST

ராகு கேது செயல்பாடுகளால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி மாற்றம் மட்டுமல்லாது மற்ற செயல்பாடுகளும் 12 ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஜனவரி மாத தொடக்கத்திலேயே ராகு மற்றும் கேது இருவரும் நட்சத்திர மாற்றம் செய்தனர் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தார்கள். இவர்களுடைய நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்

ரிஷப ராசி

 

இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான பலன்களை ராகு கேது கொடுக்கப் போகின்றனர். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணக்காரர் ஆகும் யோகம் உண்டாகும். வாழ்வில் செழிப்பு அதிகமாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வணிகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேஷ ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். காரிய தடைகள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் விலகும்.

துலாம் ராசி

 

ராகு கேது பயணமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுத்துள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

கும்ப ராசி

 

ராகு கேது பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்கள் அள்ளிக் கொடுப்பார். பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. மக்களிடம் மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய சுற்று வட்டாரத்தில் அந்தஸ்து பெருகும். பண பலம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.