Rahu and Mars combination: மீன ராசியில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை.. வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டிய ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu And Mars Combination: மீன ராசியில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை.. வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டிய ராசிகள்

Rahu and Mars combination: மீன ராசியில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை.. வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டிய ராசிகள்

Marimuthu M HT Tamil
Apr 09, 2024 08:45 PM IST

மீன ராசியில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

மீன ராசியில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை
மீன ராசியில் ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை

செவ்வாய் நவக்கிரகங்களில் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை, வீரம் போன்றவற்றுக்கு அவரே காரணம் ஆகும். ஏப்ரல் 22ஆம் தேதி, செவ்வாய் கிரகம், மீன ராசியில் நுழைகிறார். இவ்வாறு மீன ராசியில், சஞ்சரிக்கும் ராகுவும் செவ்வாயும் ஒன்றாக இருக்கிறார்கள். அவற்றின் சேர்க்கையில், செவ்வாய் யோகம் உண்டாகிறது. சில ராசிக்காரர்களுக்கு கடினமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. அப்படி கடினமான சூழ்நிலைகளைச் சந்திக்கும் ராசிகள் குறித்துக் காண்போம். 

மேஷம்: மேஷ ராசியின் 12ஆவது வீட்டில் செவ்வாய் யோகம் உருவாகிறது. இது பணம் சம்பாதிப்பதில் சில சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தகவல்தொடர்பு இடைவெளி இருக்கலாம். இது தம்பதியரின் வாழ்க்கையில் எதிர்மறையை உருவாக்கும். உங்களை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாகவும் அமைதியாகவும் மாற்றலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். தம்பதிகளிடையே அந்நியோன்யம் குறையும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஒன்றும் சிறப்பானதாக இருக்காது.

கன்னி: கன்னி ராசியின் ஐந்தாவது வீட்டில் செவ்வாய் யோகம் ஏற்படுகிறது. திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் இருந்து விலகி இருப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில், மக்கள் சில கடினமான நேரங்களைக் கொண்டிருக்கலாம். நீங்கள் உறவுகளின் உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடித்து புதிய பரிமாணங்களை ஆராய முயற்சிப்பீர்கள். தம்பதிகளிடையே அந்நியோன்யம் குறையும்.

கும்பம்: கும்பத்தின் இரண்டாவது வீட்டில் உங்கள் ராசியில் செவ்வாய் யோகம் உருவாகியுள்ளது. இதனால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களுடன் மோதல்கள் ஏற்படும். உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் வரும். தனிப்பட்ட வாழ்க்கையில், சில தவறான புரிதல்கள் இருக்கலாம். இது உங்கள் மனைவியுடன், கசப்பான வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இயல்பை விட குறைவாக இருக்கும். இருந்தாலும், கொஞ்சம், எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்