Rahu and Ketu: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ராகு-கேது மூலம் உண்டாகும் தர்மகர்மாதிபதி யோகமும்! நன்மைகளும்!
கணிக்க சிரமாமான கிரகங்கள் வரிசையில் ராகு, கேதுக்கள் உள்ளனர். நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகியோர் சில இடங்களில் மிகச்சிறந்த ராஜயோகத்தை தரும் நிலையை உண்டாக்குவார்கள். ராகு, கேது கிரகங்கள் தருவதை யாராலும் தடுக்க முடியாது.
ஒரு ஜாதகத்தில் 9 மற்றும் 10ஆம் அதிபதிகள் தொடர்பு பெற்று இருந்தால் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகின்றது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் உத்யோகம், தொழில், முன்னேற்றம் மூலம் பெரும் செல்வாக்கு மற்றும் செல்வத்தை பெருவார்கள்.
கணிக்க சிரமாமான கிரகங்கள் வரிசையில் ராகு, கேதுக்கள் உள்ளனர். நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகியோர் சில இடங்களில் மிகச்சிறந்த ராஜயோகத்தை தரும் நிலையை உண்டாக்குவார்கள். ராகு, கேது கிரகங்கள் தருவதை யாராலும் தடுக்க முடியாது. உலகின் மிகப்பெரும் கோடீஸ்வர அமைப்பில் இருப்பவர்களுக்கு ராகு திசை பெரிய மாற்றங்களை தரும். ஆன்மீகத்தில் உயரிய நிலையில் இருப்பவர்களுக்கு கேது மூலம் பெரும் நன்மைகள் உண்டாகும். இந்த கிரகங்கள் உடன் 9 மற்றும் 10ஆம் வீட்டில் அதிபதிகள் தொடர்பு உண்டாகும் போது ஜாதக்ருக்கு அற்புதமான கிரக பலன்களை தரும்.
மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு ராகு-கேது மூலம் உண்டாகும் தர்மகர்மாதிபதி யோகம்
மேஷம்
மேஷம் லக்னத்திற்கு குரு மற்றும் சனி பகவான் ஆகியோர் தர்ம கர்மாதிபதிகளாக உள்ளார்கள். இதில் தர்மாதிபதியான குரு பகவான் ஆனவர் ராகு அல்லது கேது உடன் தொடர்பு கொண்டு இருந்தால் அவர்களுக்கு ராகு மற்றும் கேது திசை மிகப்பெரிய நன்மைகளை தரும். தனுசு, மீனம், கடகத்தில் ராகு அல்லது கேது ஆகியோர் இருக்கும் போது இந்த யோகம் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷபம் லக்னத்திற்கு கடகத்தில் ராகு, கன்னியில் குரு அமர்ந்து மகரத்தில் உள்ள சனி பகவானை பார்க்கும் போது நன்மைகள் உண்டாகும்.
மிதுனம்
மிதுனம் லக்னத்திற்கு சனி, குரு உடனான தொடர்பு ராகு, கேதுவுக்கு சுபத்துவம் பெற்ற நிலையில் ராஜயோகத்தை கொடுக்கும்.
கடகம்
கடகம் லக்னத்திற்கு செவ்வாய், குரு பகவான் உடைய இணைவு அல்லது பார்வை ராகு, கேதுவுக்கு கிடைக்கும் போது யோகத்தை உண்டாகும்.
சிம்மம்
சிம்மம் லக்னத்திற்கு ராகு, கேது பெரிய நன்மைகள் செய்வது இல்லை என்றாலும் தர்மகர்மாதிபதிகள் உடன் தொடர்பு ஏற்படும் போது நன்மைகள் அதிகம் ஏற்படும். சுக்கிரன், செவ்வாய் தொடர்பு ராகு, கேதுவுக்கு ஏற்படும் போது இந்த யோகம் ஏற்படுகின்றது.
கன்னி
கன்னி லக்னத்திற்கு புதன், சுக்கிரன் உடன் ராகு, கேது தொடர்பு ஏற்படும் போது மிகச்சிறந்த ராஜயோகம் உண்டாகும். கன்னி லக்னத்திற்கு ராகு நன்மைகளை செய்ய கடமைப்பட்டவர்கள் ஆவார்.
துலாம்
துலாம் லக்னத்திற்கு புதன், சந்திரன் ஆகியோர் 9 மற்றும் 10ஆம் வீட்டின் அதிபதிகளாக உள்ளனர். சந்திரன் உடனான தொடர்பு, புதன் உடனான இணைவு அல்லது தொடர்பில் ராகு, கேது இருக்கும் போது தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிகம் லக்னத்திற்கு சூரியன், சந்திரன் ஆகியோர் தர்மகர்மாதிபதிகளாக உள்ளனர். இவர்கள் வலுப்பெற்று ராகு, கேது உடன் தொடர்பில் இருந்தால் யோகம் உண்டாகும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு சூரியன், புதன் ஆகியோர் உடன் ராகு, கேது கிரகங்கள் தொடர்பில் இருக்கும் போது சிறப்பான யோகத்தை தரும்.
மகரம்
மகரம் லக்னத்திற்கு புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் வீடுகளில் ராகு, கேதுக்கள் அமரும் போது அற்புதமான யோக நன்மைகளை தரும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ராகு, கேது உடன் ஏதேனும் ஒரு வழியில் தொடர்பில் இருக்கும் போது சிறப்பான யோகங்களை தருவார்.
மீனம்
மீனம் லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய், குரு ஆகியோர் உடன் ராகு, கேதுக்களுக்கு தொடர்பு ஏற்படும் போது யோகம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.