Ragu Ketu : தொட்ட தெல்லாம் பிரச்சனைதா.. ராகு, கேது எந்த இடத்தில் இருக்க கூடாது தெரியுமா.. தொழில் முதல் எல்லாமே கஷ்டம்!
Ragu Ketu : ராகு, கேது என்பது ஒரு கணித புள்ளி. இந்த கணித புள்ளி நிறைய கிரகங்களை கெடுக்கிறது. ஒரு ஜாதகத்தில் ராகு, கேது எங்கு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு தீமை கொடுக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். ராகு, கேது எங்கு இருந்தாலும் பெரிய அளவில் நன்மைகள் இருக்கப்போவதில்லை.
Ragu Ketu : பொதுவாக ராகு கேது நடவடிக்கைகளை வைத்து ஜோதிடத்தில் பல முக்கியமான பலன்கள் கணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் ராகு கேது எங்கே இருக்கக் கூடாது என்பதை இங்கு பார்க்கலாம். ஒரு ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் சந்திரன் இருக்கக்கூடிய நிலையை குறிப்பிடுவதற்காக ஜாதகத்தில் உள்ளது. ராகு, கேது என்பது ஒரு கணித புள்ளி. இந்த கணித புள்ளி நிறைய கிரகங்களை கெடுக்கிறது. ஒரு ஜாதகத்தில் ராகு, கேது எங்கு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு தீமை கொடுக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். ராகு, கேது எங்கு இருந்தாலும் பெரிய அளவில் நன்மைகள் இருக்கப்போவதில்லை. ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு கட்டமும் 30 டிகிரியில் அமைந்திருக்கும். அந்த 30 டிகிரியில் ஆரம்பத்தில் இரண்டு டிகிரியிலும் இறுதியில் இரண்டு டிகிரியிலும் ராகு கேது இருக்கக்கூடாது.
எந்த ஜாதகமாக இருந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் அந்த ராசியினுடைய ஆரம்பத்தில் இரண்டு டிகிரியிலும் கடைசியில் இரண்டு டிகிரியிலும் ராகு , கேது இருக்க கூடாது இதை சந்தி என்று அழைப்பர். ராகு கேது ராசியின் சந்தியில் இருக்கக் கூடாது அதேபோல ஒரு கிரகம் உள்ள ராசியில் கூடவே ராகு, கேது இருக்கக் கூடாது. மேலும் ஒரு கிரகம் உள்ள ராசிக்கு ஒன்றாவது ராசியில் ராகு, கேது இருக்கக் கூடாது. அல்லது அந்த கிரகம் உள்ள ராசியில் இருந்து ஐந்தாவது, ஒன்பதாவது ராசிகளிலும் இந்த ராகு கேது இருக்கக் கூடாது. ராகு, கேது விளிம்பில் இருந்தால் மனோரீதியாக குழப்பமான நபர் என்பதை புரிந்து கொள்ளலாம். ராகு கேது எந்த கிரகத்தோடு இருந்தாலும் அந்த கிரகத்தை பாழ்படுத்தும்.
எந்த இடத்தில் ராகு, கேது இருக்க கூடாது
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு இருந்தால் ஒரு ஆண் ஜாதகமாக இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது. சூரியனோடு ராகு இருந்தால் குழந்தை பிறப்பில் பிரச்சனை வரலாம். தந்தையுடன் இருக்கக்கூடிய பாசம் பிள்ளைகளோடு இருக்கக்கூடிய உறவு சிறப்பாக இருக்காது. ஒரு ஜாதகத்தில் புதனோடு ராகு இருந்தால் நிலம், காதல், கல்வி போன்ற செயல்பாடுகளை சிறப்பாக விளங்குவது கடினம்.
ஒரு ஜாதகத்தில் குருவோடு கேது இருந்தால் அவருடைய பழக்க வழக்கங்கள் சரியாக அமையாது. ஒரு ஜாதகத்தில் சனியுடன் கேது இருந்தால் அவரது தொழில் செயல்பாடுகள் சிறப்பாக அமையாது. ஒரு ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு, கேது இருந்தால் அவருடைய அம்மா வாழ்க்கையும், அவரது மனநிலையும் சரியாக அமையாது.
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் உள்ள ராசிக்கு அடுத்த ராசியில் ராகு, கேது அமையக்கூடாது எப்படி ஒரு கிரகத்தோடு ராகு, கேது ஒரே ராசியில் இருக்க கூடாதோ, அதைப்போலவே இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிக வீரியமானது ராகு கேது அடுத்த ராசியில் அமைவது. உதாரணமாக மேஷ ராசியில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் ரிஷப ராசியில் கேது இருந்தால் கண்டிப்பாக அவர்களது குடும்ப வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பிரச்சனையை தீர்க்கவழி
ராகு கேதுவால் ஏற்படக் கூடிய பாதிப்பை குறைக்க வேண்டும் என்றால் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி நிற்பதே சிறப்பான வழி. அதுவே நம் பிரச்சனைகளை குறைப்பதற்கும் நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்