Puthiyara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழ் மிக்க புத்தர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!
Puthiyara Yogam: புத்திர ஸ்தானாதிபதி என்று சொல்லக்கூடிய 5ஆம் அதிபதியும், கர்ம காரகன் என்று சொல்லக் கூடிய 10 ஆம் அதிபதியும் கேட்டுப் போகாமல் இருவரும் ஒருவருக்குஒருவர் தொடர்பு கொண்ட நிலையில், இவர்கள் மீது குரு பார்வை இருப்பின் பிள்ளைகளால் புகழ் உண்டாகும் யோகம் உருவாகும்.

”ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற திருக்குறள் ஆனது குழந்தை வளர்ந்து ஆளாகி சான்றோராய் வளர்வதன் மூலம் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியை பற்றி கூறுகின்றது.
புகழ் பெறும் புத்திர அமைப்பு
புகழ் பெறும் புத்திர அமைப்பு அனைவரின் ஜாதகத்திலும் இருக்கும். பிறக்கும் குழந்தைகள் புகழ், பெயர், செல்வம் உடையவர்களாக இருப்பார்களா என்பதை சில கிரக அமைப்புகள் சுட்டிக்காட்டும்.
புகழ் உண்டாகும் யோகம்
புத்திர ஸ்தானம் என்பது 5ஆம் வீடு ஆகும். புத்தர காரகன் என்பது குரு பகவானை குறிக்கும். புத்திர ஸ்தானாதிபதி என்று சொல்லக்கூடிய 5ஆம் அதிபதியும், கர்ம காரகன் என்று சொல்லக் கூடிய 10 ஆம் அதிபதியும் கேட்டுப் போகாமல் இருவரும் ஒருவருக்குஒருவர் தொடர்பு கொண்ட நிலையில், இவர்கள் மீது குரு பார்வை இருப்பின் பிள்ளைகளால் புகழ் உண்டாகும் யோகம் உருவாகும்.
லக்ன வாரியான கணிப்புகள்
மேஷ லக்னத்திற்கு சூரியன், சனி பகவான் உள்ளனர். ஆனால் இவர்கள் நல்ல நிலையில் இணைவது சாத்தியம் இல்லாதது ஆகும். இவர்களுக்கு நடுவில் குரு இருக்கும் போது புகழ் மிக்க புத்திர அமைப்பு உண்டாகும்.
ரிஷபம் லக்னத்திற்கு புதன், சனி இணைந்து குரு தொடர்பு ஏற்படும் போது புகழ் மிக்க புத்திர யோகம் உண்டாகும்.
மிதுனம் லக்னத்திற்கு சுக்கிரன், குரு இணைந்து குரு தொடர்பு ஏற்படும் போது புகழ் மிக்க புத்திர யோகம் உண்டாகும்.
கடகம் லக்னத்திற்கு 5 மற்றும் 10க்கு உடையவர் செவ்வாய் என்பதால் குருவும், செவ்வாயும் இணைந்த நிலையில் இருந்தாலே புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
சிம்மம் லக்னத்திற்கு குரு, சுக்கிரன் மூலம் புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
கன்னி லக்னத்திற்கு சனி, புதன் இணைவுடன் குரு பார்வை மூலம் புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
துலாம் லக்னத்திற்கு சனி மற்றும் சந்திர பகவான் உள்ளனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட கிரகங்களாக உள்ளனர். இவர்களுக்கு நடுவில் குரு பகவான் இருந்து பார்வை படும் போது புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
விருச்சிகம் லக்னத்திற்கு குரு, சூரியன் இணைவு மூலம் புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
தனுசு லக்னத்திற்கு செவ்வாய், புதன் வருவதால் இவர்கள் உடன் குரு நல்ல நிலையில் சேர்வது அல்லது பார்ப்பதன் மூலம் புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
மகரம் லக்னத்திற்கு 5 மற்றும் 10 ஆம் அதிபதியோடு சுக்கிரன் உள்ளதால், குரு உடன் சுக்கிரன் இணைவு புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
கும்பம் லக்னத்திற்கு புதன், செவ்வாய் வருவதால் குரு பார்வை மூலம் புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
மீனம் லக்னத்திற்கு சந்திரன், குரு மூலம் புகழ் மிக்க புத்தர யோகம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்..
