Puthan Luck: சிம்ம ராசியில் அஸ்தமனம் ஆகும் புதன்பகவான்.. கொட்டப்போகும் பணமழை..ராஜபோக வாழ்க்கை பெறபோகும் 3 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Puthan Luck: சிம்ம ராசியில் அஸ்தமனம் ஆகும் புதன்பகவான்.. கொட்டப்போகும் பணமழை..ராஜபோக வாழ்க்கை பெறபோகும் 3 ராசிகள்!

Puthan Luck: சிம்ம ராசியில் அஸ்தமனம் ஆகும் புதன்பகவான்.. கொட்டப்போகும் பணமழை..ராஜபோக வாழ்க்கை பெறபோகும் 3 ராசிகள்!

HT Tamil HT Tamil Published Jul 28, 2024 12:46 PM IST
HT Tamil HT Tamil
Published Jul 28, 2024 12:46 PM IST

Puthan Luck: சிம்ம ராசியில் அமர்ந்திருக்கும் புதன் பகவான் ஏறுமுக நிலையில் இருக்கிறார். ஆகஸ்ட் 4 அன்று, உதயத்தில் இருந்து அஸ்மனத்திற்குள் செல்வார். - ராஜவாழ்கை பெறும் ராசிகள்!

Puthan Luck: சிம்ம ராசியில் அஸ்தமனம் ஆகும் புதன்பகவான்.. கொட்டப்போகும் பணமழை..ராஜபோக வாழ்க்கை பெறபோகும் 3 ராசிகள்!
Puthan Luck: சிம்ம ராசியில் அஸ்தமனம் ஆகும் புதன்பகவான்.. கொட்டப்போகும் பணமழை..ராஜபோக வாழ்க்கை பெறபோகும் 3 ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

சேனாதிபதியாக புதன் பகவான் 

மற்ற கிரகங்களை விட, புதனுக்கு சேனாதிபதி அந்தஸ்து உண்டு. புதன் பகவானின் சுப ஸ்தானம் ஒருவரை உயர்ந்த பதவியையும், மரியாதையையும், தொழிலில் செல்வத்தையும் பெறச் செய்யும். அதே நேரத்தில், புதனின் மோசமான நிலை,  வாழ்க்கையில் சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். 

தற்போது, சிம்ம ராசியில் அமர்ந்திருக்கும் புதன் பகவான் ஏறுமுக நிலையில் இருக்கிறார். ஆகஸ்ட் 4 அன்று, உதயத்தில் இருந்து அஸ்மனத்திற்குள் செல்வார். இந்த காரணமாக, எந்த ராசிக்காரர்கள் பலன் அடைய இருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். 

தனுசு ராசிக்காரர்கள்

சிம்ம ராசியில் புதன் அஸ்தமனம் ஆவதால் தனுசு ராசிக்காரர்கள் பெரிது பயன் அடைய இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். போட்டிக்கு தயாராகி வருபவர்களுக்கு, நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பரின் உதவியால் வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் விலக ஆரம்பிக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கும் பலன் 

கடக ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் கிடைக்கும். பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பணிகள் மாறத் தொடங்கும். செல்வம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த சூழ்நிலை நிலவும். புதனின் சுப பலன் காரணமாக தொழிலில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்ம ராசிக்காரர்களும் இதனால் நன்மைகளை பெற இருக்கிறார்கள். பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக முடிவுக்கு வரத் தொடங்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவுடன், உங்கள் வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

----

சனி பகவானோடு இணையும் சூரியன்:

சனி பகவானோடு சூரிய பகவான் இணைந்தால், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் பக்தி இன்பினிட்டி சேனலில் பேசி இருக்கிறார்

சனிபகவான் தொழிலைக் குறிப்பவன்

இதுகுறித்து அவர் அதில் பேசும் பொழுது," சனிபகவான் தொழிலைக் குறிப்பவன். சூரிய பகவான் புகழை குறிப்பவன். சனிபகவான் சூரிய பகவானோடு இணையும் பொழுது, நீங்கள் எந்த மூலை, முடுக்கில் கடை அமைத்தாலும்உங்களைத் தேடி ஆள் வந்தே தீரும்; காரணம், சூரியன் புகழைத் தேடித் தராமல் விடமாட்டான். தந்தைக்கும், மகனுக்குமான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தி சண்டை சச்சரவுகளை இந்த கூட்டணி உருவாக்கும். பதவி உயர்வில் கை வைத்து சிக்கல்களை உருவாக்கும்.

பணியாற்றுபவர்களுக்கு இந்த இணைவானது, அவ்வளவு சீக்கிரம் பதவி உயர்வை கொடுத்து விடாது. இவர்களுடைய உயர் அதிகாரி, வேறு மதத்தினராகவோ அல்லது வேறு மொழியை சேர்ந்தவராகவோ இருப்பார் இவர்களுக்கு காயங்கள் எளிதில் உண்டாகி விடும்.

காவல் தெய்வங்களின் மீது விருப்பம்

இவர்கள் காவல் தெய்வங்களை மிகவும் விரும்பி வணங்கி வருவார்கள். பெண் ஜாதகத்தில், இவர்களது அப்பாதான், அவர்களுக்கு முன்மாதிரியான ஆளாக இருப்பார். கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டு, கிட்டப்பார்வை, தூரப்பார்வை சிக்கல்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தோல் சம்பந்தமான வியாதிகள், உயர்கல்வியில் தடைகள், குழந்தை பேரில் போராட்டத்தை சந்திக்கும் நிலை.. இவையெல்லாம் சனி சூரியன் இணைவு உண்டாக்கும் பலன்களாகும். பிரதோஷ வழிபாடு, காலபைரவ வழிபாடு உள்ளிட்டவை இவர்களுக்கு மிகப்பெரிய பலன்களை கொடுக்கும்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று கூறவில்லை. விரிவான மற்றும் கூடுதல் தகவலுக்கு, தொடர்புடைய துறையில் நிபுணரை அணுகவும்.

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்