தமிழ் செய்திகள்  /  Astrology  /  Put These 3 Things Together To Solve Debt Problem Immediately This Remedy Is Enough

Kadan Adaiya pariharam: 15 நாளில் கடன் பிரச்சனை தீர இந்த 3 பொருட்களையும் ஒண்ணா வைங்க.. இந்தப் பரிகாரம் ஒண்ணே போதும்!

Manigandan K T HT Tamil
Mar 20, 2024 04:09 PM IST

Kadan adaiya pariharam in tamil: மகாலட்சுமி வாசம் செய்யக் கூடிய பொருள் கல் உப்பு. நேர்மறை ஆற்றலை அளிக்கக் கூடியது கல் உப்பு. அதேபோல், எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியது. கல் உப்பே சக்திவாயந்தது தான். சக்திவாய்ந்த இந்தப் பொருளை மகா சக்திவாய்ந்ததாக மாற்ற இரண்டு பொருட்களை நாம் சேர்க்க போகிறோம்.

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம் (representative image)
கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம் (representative image) (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

15 நாட்களில் ரிசல்ட் தெரியும். இந்தப் பரிகாரத்தை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

இந்தப் பரிகாரம் செய்ய உங்களுக்கு கண்ணாடி பவுல் தேவைப்படும். எனவே, ஒரு கண்ணாடி பவுல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சின்ன அகல் விளக்கு எடுத்துக் கொள்ளலாம். மண்ணால் செய்த பொருட்களையும் பயன்படுத்தலாம்.

கண்ணாடி பொருட்களில் இந்தப் பரிகாரம் செய்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

நெகட்டிவ், கண் திருஷ்டி ஆகியவற்றை வெளியே விடாமல் அப்படியே வைத்துக் கொள்ளும் குணம் கண்ணாடிக்கு உள்ளது. அதற்காகதான் கண்ணாடி பவுலை பயன்படுத்துகிறோம்.

கண்ணாடி பவுல் முழுவதும் கல் உப்பை நிரப்பி வையுங்கள். தாந்திரீக பரிகாரங்களுக்கு கல் உப்பை பயன்படுத்துவோம். கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.

மகாலட்சுமி வாசம் செய்யக் கூடிய பொருள் கல் உப்பு. நேர்மறை ஆற்றலை அளிக்கக் கூடியது கல் உப்பு. அதேபோல், எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியது.

கல் உப்பே சக்திவாயந்தது தான். ஆனால், சக்திவாய்ந்த இந்தப் பொருளை மகா சக்திவாய்ந்ததாக மாற்ற இன்னும் இரண்டு பொருட்களை நாம் சேர்க்க போகிறோம். இதனுடன் பச்சை கற்பூரம் வைக்க வேண்டும்.

பச்சை கற்பூரம் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். பெரிய பச்சை கற்பூர துண்டை கல் உப்பின் மீது வையுங்கள்.

பச்சை கற்பூரமும் மகாலட்சுமி வாசம் செய்யக் கூடிய முக்கியமான பொருள்.

அதேபோல், பணத்தை ஈர்க்கக் கூடிய நேர்மறை ஆற்றல் நிறைந்த பொருள். மேலும், இதுடன் 27 மிளகை வைக்க வேண்டும்.

ஒற்றைப்படையில் 27 மிளகை நீங்கள் வைக்கும் போது அதற்கான சக்தி இன்னும் அதிகரிக்கும். எண்ணிக்கையில் இல்லாமல் ஒரு கைப்பிடி மிளகை கூட அதில் சேர்க்கலாம்.

எப்போது இந்த பரிகாரத்தை செய்யலாம்?

அமாவாசை, பவுர்ணமி தினங்களில் செய்யலாம். மற்றபடி எந்த நாள் வேண்டுமானாலும் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எனவே, நினைவில் வைத்துக் கொள்வதற்காக அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நீங்கள் இதை மாற்றலாம்.

அப்படி இல்லையென்றால் 1 ம் தேதி வைத்தால் 15ம் தேதி மாற்ற வேண்டும். இதை வைக்கும்போது வீட்டில் எல்லா மூலைகளில் இதை காண்பிக்க வேண்டும். மனதால், பண வரவு இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

மறைவான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கைப்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

வீட்டின் அனைத்து மூலைகளிலும் நாம் இதை காட்டிவிட்டதால் நெகட்டிவ் எனர்ஜி முழுவதையும் கல் உப்பும், மிளகும் இழுத்து வைத்திருக்கும். 15 நாள் கழித்து இதை யாரும் கால் படாத இடத்தில் கொட்டிவிடுங்கள்.

இதை தொடர்ந்து செய்து பாருங்கள். 2 அல்லது 3 மாதங்களில் கடனை அடைத்து விடுவீர்கள்.

இதை செய்து விட்டு சும்மா உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள் உழைக்க வேண்டும். உழைத்தால் மட்டுமே உங்களுக்கு வருமானம் வரும். இதுபோன்ற பரிகாரங்கள் உங்களுக்கு ஏற்படும் தடைகளை சரிசெய்யும்.

விழாயன் அல்லது வெள்ளிக்கிழமை இந்தப் பரிகாரத்தை செய்யலாமா?

உங்களுக்கு நேரும் எந்த நாளிலும் செய்யலாம். வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை கூட இந்தப் பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

காலை நேரத்தில் நீங்கள் சாமி கும்பிடும்போது கூட இந்தப் பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

நீங்கள் கல் உப்பு, மிளகு, பச்சை கற்பூரம் ஆகியவற்றை போடும்போது மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அதுவே போதும்.

கடன் பிரச்சனை தீர்ந்துவிட்டால் இதை நிறுத்திவிடலாமா என்றால் உங்கள் விருப்பம் தான். நீங்கள் நிறுத்துவதாக இருந்தாலும் நிறுத்திவிடலாம் அல்லது தொடர்ந்து செய்ய வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

WhatsApp channel

டாபிக்ஸ்