Pushkala Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சக்ரவர்த்தியாக மாற்றும் புஷ்கலா யோகம் யாருக்கு?
”புஷ்கலா யோகம் மூலம் கிடைக்கும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, எதிரிகளை வெல்லும் திறன், ஆன்மீக ஈடுபாடு போன்றவை புஷ்கலா யோகத்தில் அதிகரிக்கும்”
யோகம் என்ற பொருளுக்கு சேர்க்கை என்று அர்த்தம். ஒருவரது ஜாதக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேரும்போது யோகங்கள் ஏற்படும்.
நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும், கேந்திரத்தில் உங்கள் ராசி அமைந்தால் புஷ்கலா யோகம் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். பல்வேறு கிரக அமைப்புகளால் புஷ்கலா யோகம் உருவாக முடியும். பொதுவாக, லக்னாதிபதி, சந்திரன் கேந்திர ஸ்தானங்களில் இருக்கும்போது இந்த யோகம் உருவாகிறது.
உதரணமாக ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்திருந்தால், மேஷ லக்னம், மேஷ ராசியை சேர்ந்தவராகவோ, அல்லது மேஷ லக்னம் கடக ராசியாகவோ, மேஷ லக்னம் துலாம் ராசியாகவோ, மேஷ லக்னம் மகர ராசியாகவோ அமைய வேண்டும். இதனால், சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் இருப்பார். அல்லது லக்னாதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் புஷ்கலா யோகம் உருவாகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் ராசி அதிபதியும் சந்திரனின் கேந்திரத்தில் வ்நதால் மேலும் சிறப்பு ஏற்படும்.
புஷ்கலா யோகத்தின் பலன்கள்:-
நீண்ட ஆயுள், நிலைத்தபுகழ், முயற்சியால் வெற்றி, வாழ்வில் வெற்றி, படிப்படியான முன்னேற்றம், தன்னையும், தன்னை சேர்ந்தவர்களையும் முன்னேற்றுவது, அரச போக வாழ்கை, அதிகாரத்தில் உயர்நிலை அந்தஸ்தை பெறுவது, தான் சார்ந்த துறைகளில் தன்னிகர் அல்லாத உயர் பொறுப்பை அடைவது உள்ளிட்ட பலன்கள் புஷ்கலா யோகம் மூலம் கிடைக்கும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, எதிரிகளை வெல்லும் திறன், ஆன்மீக ஈடுபாடு போன்றவை புஷ்கலா யோகத்தில் அதிகரிக்கும்.
இந்த யோகம் அனைத்து ஜாதகங்களிலும் அமைவதில்லை. யோகத்தின் பலன்கள் கிரகங்களின் பலம் மற்றும் நிலையை பொறுத்து மாறுபடும். பரிகாரம் மற்றும் வழிபாடுகள் மூலம் யோகத்தின் பலனை அதிகரிக்க முடியும்.
டாபிக்ஸ்