Purathasi Viratham 2024: சக்தி நிறைந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளின் அருளை பெற வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க…!
Purathasi Viratham 2024: சனி பகவானுடைய தொல்லையில் இருந்து மீள நாராயணருக்கு உகந்த நாளாகிய சனிக்கிழமை அன்று செய்யக்கூடிய வழிபாடு தோஷங்களை நீக்கி கிரகப் பிரச்சனைளில் இருந்து நம்மை காக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இதில் வரும் சனிக்கிழமை மிகுந்த விஷேசம் வாய்ந்தது ஆகும். மட்டும் இல்லாமல் புதன்கிழமைகளும் விசேஷமான நாட்களாக உள்ளது. சனி பகவானுடைய தொல்லையில் இருந்து மீள நாராயணருக்கு உகந்த நாளாகிய சனிக்கிழமை அன்று செய்யக்கூடிய வழிபாடு தோஷங்களை நீக்கி கிரகப் பிரச்சனைளில் இருந்து நம்மை காக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
புரட்டாசியும் தளிகையும்!
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு தளிகை போடுவது விஷேஷம் ஆகும். அக்ஷய பாத்திரத்தில் பெருமாளுடைய நாமத்தை சொல்லி பெற்றுக்கொண்டு வந்த அந்த அரிசியை இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு செய்யக்கூடியது புரட்டாசி சனிக்கிழமைகளில் விஷேசம் ஆகும்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் தளிகை இட்டு செய்யக்கூடிய வழிபாடு அற்புதமான நலன்களை நமக்கு பெற்றுத்தரும். சர்க்கரை பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகிய ஐந்து வகையான சாதங்கள், மிளகு, சீரகம் சேர்த்த உளுந்து வடை, கருப்பு சுண்டல் அல்லது வெள்ளை சுண்டல் ஆகியவை பெருமாளுக்கு நெய்வேத்தியத்துற்கு செய்ய வேண்டியது ஆகும். இதன் உடன் பானகம் அல்லது துளசி தீர்த்தம் வைத்துக் கொள்ளலாம். நாம் செய்வதை உள்ளன்போடு செய்தால் இறைவன் அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.
புரட்டாசியும் சனிக்கிழமைகளும்…!
வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று வரும் இரண்டாவது சனிக்கிழமை அன்று ஏகாதேசியும் சேர்ந்து வருகின்றது. புரட்டாசி ஏகாதேசி என்பது மிகுந்த விஷேசம் ஆகும்.
அடுத்த அக்டோபர் 5ஆம் தேதி அன்று மூன்றாவது சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் நவராத்திரி வழிபாடும் தொடங்குகின்றது. இந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு செய்வது உன்னத பலன்களை கொடுக்க வல்லது.
அக்டோபர் 12 ஆம் தேதியான கடைசி சனிக்கிழமை அன்று திருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரம் வருவது கூடுதல் விஷேசம் ஆகும்.
சனிக்கிழமைகளும் வழிபாடுகளும்…!
ஏகாதசி நாளில் பெருமாளுக்கு துளசியினால் செய்யக்கூடிய பூஜை விசேஷமான பலன்களை தரும். நாராயணர் படத்தின் முன்னர் ஏலக்காய், பச்சைக்கற்பூரம், துளசி சேர்த்த தீர்த்தத்தை வைத்து, துளசி இலைகளால் அவரது நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்துவது மிகுந்த சிறப்புகளை தரும். துளசி மாடம் வீட்டில் இருப்பவர்க ஏகாதசி அன்று இந்த பூஜையை செய்வது விசேஷமான பலனை பெற்றுத்தரும்.
நவராத்திரி காலத்தில் வரும் சனிக்கிழமையில் மாகாலட்சுமி தாயாருக்கு விளக்கு ஏற்றி கல்கண்டு அல்லது பால் அல்லது கல்கண்டு சாதம் ஆகிய ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து 108 போற்றிகள் சொல்லி குங்கும அர்ச்சனைகளை செய்வது மிகுந்த நன்மைகளை வீட்டிற்கு கொண்டு வரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்