Guru Peyarchi 2024 Uthirattathi: லாபத்தை அள்ளி கொடுக்கும் குரு! நினைத்தது நடக்கும் காலம் - உத்திரட்டாதி குரு பெயர்ச்சி
உத்திரட்டாதி நட்சத்திரம் 4 பாதங்களும் மீனம் ராசியில் இடம்பிடித்துள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த தொழிலில் நல்ல லாபத்தை அள்ளி கொடுக்கும் விதமாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும். நினைத்தது நடக்கும் காலம், குலதெய்வ வழிபாடு நல்ல நன்மை தரும் ஜோதிடத்தில் என கணிக்கப்பட்டுள்ளது.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார். மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சி தொடங்கியுள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம் நான்கு பாதங்களும் மீன ராசியில் இடம்பிடித்துள்ளது.
குரு பெயர்ச்சியால் உத்திரட்டாதி நட்சத்தினருக்கான பொதுப்பலன்கள்
உத்திரட்டாதி நட்சத்தினர் சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பீர்கள். இதுவரையில் இருந்த கஷ்டங்கள், பண பற்றாக்குறை நீங்கி, பொருளாதாரம் நிலை சீராகும். கையில் பணம், தனம் இருக்கும். தேவையில்லாமல் இருந்த மனகுழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.
ஆபரண சேர்க்கை உண்டு. நினைத்தது நடக்கும் காலமாக குரு பெயர்ச்சி அமையும். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கு. உறவுகளால் நற்பலன்களை பெறுவீர்கள். உங்களை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளும் காலமாக இருக்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் செய்வோர் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
வேலையில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. இடமாற்றம் ஏற்படலாம். வேலை நிமித்தமான பயணங்கள் இருக்கும். உழைப்புக்கு ஏற்ப பலனை பெறுவீர்கள். உடன் பணியாற்றுபவர்கள், மேலதிகாரி ஆதரவாக இருப்பார்கள்.
நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் சகாயம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நல்ல அனுகூலத்தை தரும்.
தசாபுத்தி பலன்கள்
புதன் திசையில் இருப்பவர்கள் (30 வயது வரை) படிப்பில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு தடை இருந்தாலும் வாய்ப்புகள் கைகூடி வரும். நண்பர்கள் வழியில் இருந்து வந்த பாதிப்புகள், பிரச்னைகள் அகலும். உதவியும் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு இருந்து வந்த பிரச்னை அகலும்.
கேது திசையில் இருப்பவர்களுக்கு (37 வயது வரை) புதன் திசையினருக்கு கிடைக்கும் அத்தனை நன்மைகளும் உண்டு. நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றம் கிடைக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் ஏற்படும்.
சுக்கிர திசையில் இருக்கும் நபர்கள் (57 வயது வரை) இதுவரை இருந்த துயரங்கள், கெடு பலன்களின் இருந்து கொஞ்சம் விடுபடுவீர்கள். நண்பர்கள் கைகொடுப்பார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பெண்களுக்கு இருந்து வந்த வேலை பழு அகலும்
சூரிய திசையில் இருப்பவர்கள் (63 வயது வரை) கடன் பிரச்னைகள் நீங்கும். நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். மனஅழுத்தம், கஷ்டங்கள் நீங்கும், சுபகாரியங்கள் நடக்கும்.
சந்திர திசையில் இருப்பவர்களுக்கு (73 வயது வரை) சுய தொழில் பாதிப்புகள் விலகும். மனஅழுத்தங்கள் விலகும். உடல்நிலை தொந்தரவுகள் இருக்காது. உறவினர்கள் மூலம் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
செவ்வாய் திசையில் இருப்பவர்களுக்கு (80 வயது வரை) வீடு கட்டும் யோகம் கிடைக்கும். பிள்ளைகள் வளர்ச்சி அடைவார்கள். பொருளாதார ரீதியாக முன்னேறுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்