Lepakshi Temple: ஜடாயு எழுந்த இடம்! 'மோடி வழிபட்ட லெபக்ஷி கோயிலின் சிறப்புகள்’
”Lepakshi Temple: சீதையை ராவணன் கடத்தி சென்ற போது கழுகு உருவத்தை கொண்ட ஜடாயு வழிமறித்த நிலையில், ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டியதாகவும் புராண இதிகாரமான ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது”
அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று வருகிறார்.
நேற்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லெபக்ஷி வீரபத்திரர் கோயிலுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
ராம பிரானை போற்றி பாடிய பஜனை நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தெலுங்கு மொழியில் பாடப்பட்ட பாடல்களைக் கேட்டதுடன், பொம்மலாட்டம் மூலம் சொல்லப்பட்ட ராமாயண நிகழ்வுகளையும் பார்த்தார். வழிபாடுகள் மட்டுமின்றி கோவிலின் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழிகாட்டிகள் விளக்கினர்.
சீதையை ராவணன் கடத்தி சென்ற போது கழுகு உருவத்தை கொண்ட ஜடாயு வழிமறித்த நிலையில், ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டியதாகவும் புராண இதிகாரமான ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதனால் படுகாயம் அடைந்து கீழே விழுந்து இருந்த ஜடாயுவை ராமபிரான் எழுந்திருக்க சொன்ன இடமே ‘லெபக்ஷி’ எனப்படுகிறது.
தெலுங்கு மொழியில் ‘லெ’ என்றால் எழு என்றும், ‘பக்ஷி’ என்றால் பறவை என்றும் பொருள்படும். இதனால் இந்த இடத்திற்கு லெபக்ஷி என பெயர் வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
லெபக்ஷியில் சிவன், விஷ்ணு, பாபநாதேஸ்வரர், ரகுநாதர், ராமர் மற்றும் பிற தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. வீரபத்திரர் கோயிலில் உள்ள பசவண்ணர் என்ற நந்தி சிலை அதன் அழகிய வேலைப்பாடுகளுக்காக பெயர் பெற்று விளங்குகிறது.
டாபிக்ஸ்