Pradosha Vratam: தை மாதத்தில் வரும் சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம்.. தேதி மற்றும் வழிபடுவது எப்படி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pradosha Vratam: தை மாதத்தில் வரும் சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம்.. தேதி மற்றும் வழிபடுவது எப்படி

Pradosha Vratam: தை மாதத்தில் வரும் சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம்.. தேதி மற்றும் வழிபடுவது எப்படி

Marimuthu M HT Tamil
Jan 18, 2025 12:59 PM IST

Pradosha Vratam: தை மாதத்தில் வரும் சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம்.. தேதி மற்றும் வழிபடுவது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

Pradosha Vratam: தை மாதத்தில் வரும் சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம்.. தேதி மற்றும் வழிபடுவது எப்படி
Pradosha Vratam: தை மாதத்தில் வரும் சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம்.. தேதி மற்றும் வழிபடுவது எப்படி

பிரதோஷ விரதம் எம்பெருமான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது தை மாதம் நடந்து கொண்டிருக்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது.

ஒன்று கிருஷ்ண பக்ஷத்திலும், மற்றொன்று சுக்ல பக்ஷத்திலும் பிரதோஷ விரதம் கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தில் வரும் பிரதோஷ விரதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதோஷ விரதத்தில், பிரதோஷ காலத்தில் மட்டுமே வழிபாடு சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதோஷ காலம் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு தொடங்குகிறது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவன் மற்றும் பார்வதியின் ஆசீர்வாதம் பெறலாம்:

இந்து மத நம்பிக்கைகளின்படி, வாரத்தின் ஏழு நாட்களும் பிரதோஷ விரதம் இருப்பது சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். இந்த விரதத்தை ஒருவர் அனுசரிப்பதன் மூலம், சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுகிறார். அப்படியிருக்க, இந்த தை மாதத்தில் வரும் பிரதோஷ விரதத்தின் தேதியை அறிந்து கொள்வோம்.

தை மாதத்தின் முதல் பிரதோஷ விரதம், வரும் ஜனவரி 27ஆம் தேதி திங்கட்கிழமை அனுசரிக்கப்படும். இந்த பிரதோஷ விரதம் திங்கட்கிழமை வருவதால், இது சோம வார பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

முகூர்த்தம்:

கிருஷ்ண திரயோதசி ஆரம்பம்: ஜனவரி 27 - 08:54 PM,

கிருஷ்ண திரயோதசி முடிவு - ஜனவரி 27 - 08:34 PM,

பிரதோஷ காலம் - 05:42 PM முதல் 08:17 PM

பிரதோஷ விரத நாள்:

வரும் பிப்ரவரி 10, திங்கட்கிழமை, தை மாதத்தின் இரண்டாவது பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படும். இந்த பிரதோஷ விரதம் திங்கட்கிழமை வருவதால், இது சோமவார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது.

முகூர்த்தம் -

சுக்ல திரயோதசி ஆரம்பம் - 07:25 PM, பிப்ரவரி 09;

சுக்ல திரயோதசி முடிவு - 06:57 PM, பிப்ரவரி 10;

பிரதோஷ காலம் - 05:51 PM முதல் 06:57 PM வரை

பூஜை விதி:

  • பிரதோஷ நாளில் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
  • குளித்த பிறகு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
  • அதன்பின், வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றுங்கள்.
  • முடிந்தால் சிவபெருமானை நினைத்து உண்ணாநோன்பு இருங்கள்.
  • சிவபெருமானின் சிறிய சிலைக்கு, நீரால் அபிஷேகம் செய்யுங்கள்.
  • சிவபெருமானுக்கு மலர்த் தூவி வணங்குங்கள்.
  • இந்த நாளில், பார்வதி தேவியையும் விநாயகரையும் வணங்குங்கள். எந்தவொரு மங்கலச் செயலுக்கும் முன் விநாயகரை வழிபட வேண்டும்.
  • சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.
  • அதன்பின், சிவபெருமானுக்கு ஆரத்தி செய்ய வேண்டும்.
  • இந்த நாளில், முடிந்தவரை கடவுளைப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner

டாபிக்ஸ்