Pongal Festival 2025: போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை.. வரலாற்று முக்கியத்துவம் என்ன? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pongal Festival 2025: போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை.. வரலாற்று முக்கியத்துவம் என்ன? - விபரம் இதோ!

Pongal Festival 2025: போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை.. வரலாற்று முக்கியத்துவம் என்ன? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 13, 2025 04:11 PM IST

Pongal Festival 2025: தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு.

Pongal Festival 2025: போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை.. வரலாற்று முக்கியத்துவம் என்ன? - விபரம் இதோ!
Pongal Festival 2025: போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை.. வரலாற்று முக்கியத்துவம் என்ன? - விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

"அறுவடை மாதம்"

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது "அறுவடை மாதம்" என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர்

தைப்பொங்கல் என்பது நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவி செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமான பண்டிகையாகும். குறிப்பாக விவசாயத்திற்கு எதெல்லாம் உதவியாக இருந்ததோ அவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறி வணங்குவது இதன் சிறப்பம்சமாகும். இது "அறுவடை திருவிழா" எனவும் அழைக்கப்படுகிறது. இது மகர சங்கராந்தியுடன் தொடர்புடையது மற்றும் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தை பொங்கல் அன்று சூரியனை வணங்கிப் பொங்கலிட்டு கரும்பு, பழங்கள், காய்கறிகள், வெற்றிலை, பாக்கு ஆகியன வைத்து வழிபட வேண்டும். வீட்டில் சூரிய ஒளிபடும் ஏதேனும் ஓரிடத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்பு.

களைகட்டும் 4 நாள் திருவிழா

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பொங்கலாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 14 ஆம் தேதி அன்று தொடங்கும் பொங்கல் பண்டிகை ஜனவரி 16 அன்று நிறைவடைகிறது.

போகிப் பண்டிகை

முதலாவதாக வருவது போகிப் பண்டிகை. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் கிடக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

தைப் பொங்கல்

இரண்டாம் நாள் தைப்பொங்கல். தை மாதத்தின் முதல் நாள் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறுவடை செய்த நெல்லை கொண்டு, புதுப்பானை, புதுஅடுப்பில் சூரியனை பார்த்து பொங்கல் வைப்பார்கள். இந்த பானையில் மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் கட்டப்பட்டிருக்கும். அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், கிழங்குகளை கொண்டு கூட்டு சமைக்கப்பட்டு அதுவும் சூரியனுக்கு படைக்கப்படும். பாரம்பரிய உணவான பொங்கலுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். பண்டைய காலத்தில் வேளாண்மைக்கு மிக அவசியமானது மாடுகள்தான். இந்தநாள் மாடுகளுக்கு சிறப்பு செய்து பொங்கல் வைத்து வழிபடும் நாளாக இந்நாள் உள்ளது. மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் உள்ள கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள்.

காணும் பொங்கல்

காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். இந்த நாளில்தான் கிராமங்களில் விளையாட்டு போட்டிகள், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்தப் பொங்கல் பண்டிகை அனைவருக்கும் எல்லா நலன்களையும் தரும் திருநாளாக மாற தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Whats_app_banner

டாபிக்ஸ்