Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குறுக்கு வழியில் சொத்து சேர்க்கும் யோகம் யாருக்கு? பணம் கொட்டப்போகுது!-planetary systems that add wealth at crossroads in astrology and its benefits - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குறுக்கு வழியில் சொத்து சேர்க்கும் யோகம் யாருக்கு? பணம் கொட்டப்போகுது!

Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குறுக்கு வழியில் சொத்து சேர்க்கும் யோகம் யாருக்கு? பணம் கொட்டப்போகுது!

Kathiravan V HT Tamil
Oct 01, 2024 02:16 PM IST

Money Luck: சுபக் கோள்களின் அமைப்பில் உள்ளவர்களுக்கு செல்வம் சேர்ந்தாலும் பிரச்னைகள் இன்றி வாழ்வார்கள். ஆனால் பாவக் கோள்கள் உடன் ராகு இணைவு மூலம் செல்வம் சேர்த்தவர்கள் பிரச்னைகளுக்கு உள்ளாகி அதில் இருந்து மீண்டு செல்வத்தை காப்பாற்ற வேண்டி இருக்கும்.

’மேஷம் முதல் மீனம் வரை!’ குறுக்கு வழியில் சொத்து சேர்க்கும் யோகம் யாருக்கு? பணம் கொட்டப்போகுது! பிடிக்க ரெடியா?
’மேஷம் முதல் மீனம் வரை!’ குறுக்கு வழியில் சொத்து சேர்க்கும் யோகம் யாருக்கு? பணம் கொட்டப்போகுது! பிடிக்க ரெடியா?

சிம்ம லக்ன ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் செவ்வாய் ஆட்சியும், 8ஆம் இடத்தில் சுக்கிர்ன உச்சமும், 12ஆம் இடத்த்ல் சந்திரன் அல்லது குரு பகவான் உச்சம் பெற்று உள்ளார் என வைத்துக் கொள்வோம். 

மூன்று வீடுகளிலும் வலுவான கோள்கள் அமையப்பெற்றவர் செல்வத்தின் மேல் செல்வம் சேர்த்து குவிப்பார்கள். மிகப்பெரும் அரசியல் வாதியாக இவர்கள் திகழ்வார்கள். 

4 8 12 இந்த ஸ்தானங்களில் வலுவான கோள்கள் அமையப்பெற்றால் உங்களுக்கு குறுக்கு வழிகளில் செல்வம் சேரும். 

சம்பாத்தியகாரகன் என்று சொல்லக்கூடிய சூரியன் அல்லது தனகாரகன் எனப்படும் குரு பகவானோ ராகு உடன் இணைந்து இருந்தாலோ அல்லது ராகுவின் நட்சத்திரங்களில் அமர்ந்து இருந்தாலோ இவர்களுக்கும் குறுக்கு வழியில் பணம் சேரும். 

உதாரணமாக விருச்சிக லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டாம் இடத்தில் குரு பகவான் உடன் ராகு இருந்தால் குறுக்கு வழியில் செல்வம் சேறும் அமைப்பு உண்டகும். 

விருச்சிக லக்னத்திற்கு 4ஆம் இடத்தில் குரு பகவான் ஆனவர் ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தால் குறுக்கு வழியில் செல்வம் சேறும். 

ராகு பகவானின் தொடர்பை சம்பாத்திய காரகன் என்று சொல்லக்கூடிய சூரியன். தனக்காரகன் என்று சொல்லக்கூடிய குரு. 

மகரம் லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். 4ஆம் இடத்தில் சூரியன் உச்சம் பெற்று 8ஆம் இடத்தில் செவ்வாயும், 12ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து இருந்தால் குறுக்கு வழியில் சொத்து சேர்க்கும் அமைப்பு உண்டாகும். 

மூன்றாவதாக ராகு பகவான் உடன் இயற்கை சுபர்கள் சேர்ந்து யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் நிச்சயம் குறுக்கு வழியில் செல்வம் சேரும் யோகம் உண்டாகும். 

உதாரணமாக மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகு உடன் இருப்பது, புதன் உச்சம் பெற்ற கன்னியில் ராகு இருப்பது, சந்திரன் உச்சம் பெற்ற ரிஷபத்தில் ராகு இருப்பது, சூரியன் உச்சம் பெற்ற மேஷத்தில் ராகு இருப்பது, குரு உச்சம் பெற்ற கடகத்தில் ராகு இருப்பது, சனி உச்சம் பெற்ற துலாமில் ராகு இருப்பது, செவ்வாய் உச்சம் பெற்ற மகரத்தில் ராகு இருப்பது குறுக்கு வழியில் செல்வம் சேர்க்கும் நிலை உண்டாகும். 

ஆனால் சுபக் கோள்களின் அமைப்பில் உள்ளவர்களுக்கு செல்வம் சேர்ந்தாலும் பிரச்னைகள் இன்றி வாழ்வார்கள். ஆனால் பாவக் கோள்கள் உடன் ராகு இணைவு மூலம் செல்வம் சேர்த்தவர்கள் பிரச்னைகளுக்கு உள்ளாகி அதில் இருந்து மீண்டு செல்வத்தை காப்பாற்ற வேண்டி இருக்கும். சூரியன், செவ்வாய், சனி ஆகிய மூவரும் பாவக் கோள்களாக வகைப்படுத்தப்படுவர்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner