Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல! பணக்காரர்கள்..இரண்டு திருமணம் செய்து கொள்வர்களாம்-people born on these dates are lucky and fortunate and may marry two times - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல! பணக்காரர்கள்..இரண்டு திருமணம் செய்து கொள்வர்களாம்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல! பணக்காரர்கள்..இரண்டு திருமணம் செய்து கொள்வர்களாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 06, 2024 10:22 AM IST

Which number is lucky as per date of birth: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல, பணக்காரர்கள் ஆகவும், இரண்டு திருமணம் செய்து கொள்வர்கள் என எண் கணிதம் கூறுகிறது. இந்த நபர்களின் பொதுக்குணங்கள், நேர்மறை பண்புகள் உள்பட அனைத்து விஷயங்களையும் பார்க்கலாம்

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல, பணக்காரர்கள் ஆக இருப்பார்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல, பணக்காரர்கள் ஆக இருப்பார்கள்

எண் கணிதத்தின்படி, மூல எண் 3 உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படுகிறது. மூல எண் 3இன் அதிபதி குரு பகவான் இருக்கிறார். வியாழன் செல்வாக்கு பெற்றவர்கள். எண் கணிதத்தின்படி, ஒருவர் 3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தால், அவரது மூல எண் 3 ஆக இருக்கும். இந்த எண்களை உடையவர்கள் பல குணங்களைக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மூல எண் 3 பொதுக்குணங்கள்

எண் கணிதத்தின் படி, மூல எண் 3 கொண்டவர்கள் மிகவும் சுயமரியாதை உள்ளவர்கள். யாரிடமும் தலைவணங்குவது அவர்களுக்குப் பிடிக்காது. அவர்கள் யாருடைய தயவையும் பெற விரும்ப மாட்டார்கள்.

இந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் தைரியமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். இவர்கள் மனதில் என்ன முடிவெடுத்தாலும் அதை நிறைவேற்றுவார்கள் என கூறப்படுகிறது.

மூல எண் 3 நேர்மறை பண்புகள்

நீங்கள் இயற்கையோடு இயைந்திருப்பவராகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், வாழ்க்கையில் திருப்தியுடனும் வாழ்வீர்கள்.வாழ்க்கையைப் பற்றி மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவராக இருப்பதால் சிறந்த சமூகத் திறன்களைக் கொண்டவராகவும் உள்ளீர்கள். இது மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கவும், ஆன்மீக நுண்ணறிவுகளுடன் அவர்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரின் ஆலோசனையை கண்டிப்பாகப் பெறுங்கள்.

மூல எண் 3 மேம்படுத்தக்கூடிய பண்புகள்

நீங்கள் உங்களை மேலும் ஒழுங்குபடுத்தி கொண்டு, அனைத்து திட்டங்களையும் தள்ளிப்போடாமல் முடிக்க வேண்டும்.

சவால்களைச் சமாளிப்பதில் சிரமத்தைக் காணலாம் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சில சமயங்களில் நீங்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி உங்கள் உணர்ச்சிகள் உங்களை ஆள அனுமதிக்கிறீர்கள்.

உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மரியாதையை சம்பாதிப்பார்கள்

எண் 3 உடையவர்கள் சமூக மரியாதையை அதிகம் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் படிப்பில் ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் உயர் கல்வி பெறுகிறார்கள். வியாழனின் செல்வாக்கு காரணமாக, எண் 3 உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் தொலைநோக்கு மற்றும் சிந்தனையாளர்கள். சமயப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

நிதி நெருக்கடியில் மேம்பாடு பெறுவார்கள்

எண் 3 உள்ளவர்களின் நிதி நிலை கடந்த காலங்களில் சிறப்பாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் சில காலத்துக்கு பிறகு அவர்கள் நிதி ஸ்திரத்தன்மையைப் பெறுகிறார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி அடைவார்கள். உதவும் மனப்பான்மை கொண்ட இந்த மக்கள் எப்போதும் உதவ தயாராக இருப்பார்கள்.

திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள்

மூல எண் 3ம் எண் கொண்டவர்களின் திருமண வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் இருமுறை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்றும் எண் கணிதம் கூறுகிறது.

நோய் பாதிப்புகளால் தொந்தரவு

எண் கணிதத்தின்படி, எண் 3 உள்ளவர்கள் பொதுவாக முதுகுவலி, தோல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். சில சமயம் இவர்களுக்கு இடுப்பு வலி பிரச்னையும் இருக்கும்.

பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரின் ஆலோசனையை கண்டிப்பாகப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: