Pasupatheeswarar: தடை நீக்கும் பசுபதீஸ்வரர் - நீங்களும் போகணுமா?
திருமணத் தடையைப் போக்கும் பசுபதீஸ்வரர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
பல்லவ மன்னனான நந்தி வர்மனின் மகன் நிருபதுங்க பல்லவன் காலத்தில் அமைக்கப்பட்ட கோயில்தான் தற்போது பசுபதீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் அம்மன் சிவகாமி சுந்தரி, முருகன், துர்க்கை, விநாயகர் எனப் பல சன்னிதானங்கள் உள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்
அம்மன் கோயிலில் வீற்றிருக்கும் பசுபதீஸ்வரரை வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும், திருமணத்தடை நீங்கும் எனக் கூறப்படுகிறது. அம்மனாக வீற்றிருக்கும் சிவகாமசுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
சிறப்பாகப் போற்றப்படும் பிரதோஷ நாட்களில் நந்தி பெருமானையும், சிவகாமசுந்தரியையும் வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களையும் மீண்டும் எனக் கூறப்படுகிறது.
கோயிலில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் நீண்ட காலமாக நீங்காத சிக்கல்கள் அனைத்தும் நீங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த துர்க்கை வழிபாட்டில் இன்றும் அதிக பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துர்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தால் நீங்காத துயரங்கள் விடுபடும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்த கோயிலில் அமைந்திருக்கும் நவகிரக சன்னதியை முறையாக வழிபட்டால் விரைவில் நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் எனப் பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்த கோயிலில் நடைபெறும் பிரதோஷ திருநாள் வழிபாடு அன்று கலந்து கொண்டால் குடும்பத்தில் இருக்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குறிப்பாகப் பல குடும்பங்கள் திருமணத்தடை நீங்குவதற்காக இந்த பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். எனவே தீமைகள் நீங்கவும், திருமணத் தடை விலகவும் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் அனைத்து பலன்களும் கிட்டும் எனப் பக்தர்கள் கூறுகின்றனர்.
செல்லும் வழி
சென்னையிலிருந்து கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் சென்னை பேருந்து நிலையத்திலிருந்து அல்லது ரயில் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து அங்குப் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று, அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் வாடகைக்கு எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்லலாம்.
தஞ்சாவூரில் இருந்து பேருந்து வசதிகள் இந்த கோயிலுக்கு உள்ளது. ஆனால் கோயிலுக்குச் செல்ல திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் மட்டும் தான் செல்ல முடியும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.