Panguni Festival : திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா - வாங்கப் போகலாம்!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று பங்குனி பெருவிழா தொடங்க உள்ளது.
உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயில். இந்த திருக்கோயிலில் ஒரு மார்ச் 26 ஆம் தேதியன்று பங்குனி பெருவிழா தொடங்க உள்ளது. இந்த திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை தொடர்ந்து பதினைந்து நாட்கள் நடக்க உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்று காலை 8.15 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்க உள்ளது. அடுத்த நாளான மார்ச் 27ஆம் தேதி அன்று விநாயகர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அந்நாளில் விநாயகர் சப்பரம் கோயிலைச் சுற்றி வலம் வரும்.
திருவிழாவை ஒட்டி காலை 10 மணி அளவில் தினமும் தங்கப் பள்ளத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர் வீதி உலா வலம் வருவார். மார்ச் 28ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்குத் தங்கக் குதிரையை வாகனத்தில் வலம் வருவார்.
மார்ச் 29ஆம் தேதி அன்று வெள்ளி பூத வாகனத்திலும், மார்ச் 30 ஆம் தேதி அன்று அன்ன வாகனத்திலும், மார்ச் 31ஆம் தேதி அன்று சேஷ வாகனத்திலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று யானை வாகனத்திலும் வலம் வருவார்.
மேலும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று தங்கமயில் வாகனத்திலும், ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், ஏப்ரல் நான்காம் தேதி அன்று பச்சைக் குதிரை வாகனத்திலும், ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று தங்கக் குதிரை வாகனத்திலும் வலம் வருவார்.
தொடர்ந்து ஏப்ரல் ஆறாம் தேதி அன்று தங்கமயில் மற்றும் குதிரை வாகனத்திலும், ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பச்சைக் குதிரை வாகனத்திலும், ஏப்ரல் எட்டாம் தேதி அன்று வெள்ளை யானை வாகனத்திலும், ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று திருத்தேரிலும், ஏப்ரல் பத்தாம் தேதி அன்று தங்கமயில் வாகனத்திலும் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவார்.
இந்த பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று கைப்பாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று பங்குனி உத்திர திருநாளும், ஏப்ரல் எட்டாம் தேதி அன்று திருக்கல்யாண உற்சவமும், அன்றைய தினமே கிரிவலப் பாதை மகா தேரோட்டமும் நடக்க உள்ளது.
இந்த பங்குனி பெருவிழா திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் திருப்பரங்குன்றம் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.