தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pamara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பள்ளத்தில் தள்ளிவிடும் பாமர யோகம்! இதோ முழு விவரம்!

Pamara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பள்ளத்தில் தள்ளிவிடும் பாமர யோகம்! இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Jun 09, 2024 05:49 PM IST

Pamara yogam: ஜோதிட விதிப்படி யோகங்கள் அனைத்தும் யோகங்கள் அல்ல; தோஷங்கள் அனைத்தும் தோஷங்கள் அல்ல. சில நிலைகளில் தோஷங்களிலும் நன்மைகள் ஏற்படும், சில நிலைகளில் யோகங்களிலும் தீமைகள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Pamara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பள்ளத்தில் தள்ளிவிடும் பாமர யோகம்! இதோ முழு விவரம்!
Pamara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பள்ளத்தில் தள்ளிவிடும் பாமர யோகம்! இதோ முழு விவரம்!

சிக்கல்களை தரும் பாமர யோகம் 

ஆனால் சில யோகங்கள் மோசமான பலன்களை தரும் தன்மைகளை கொண்டவை.  அந்த வகையில் ஒரு யோகமாக ‘பாமர யோகம்’ உள்ளது.  ஒரு ஜாதகத்தில் நாம் 9ஆம் அதிபதியான பாக்கியாதிபதி மூலமாக அதிர்ஷ்டங்களை அனுபவிக்கிறோம். 

பாமர யோகம் எப்படி ஏற்படுகிறது?

9ஆம் அதிபதி ஒரு ஜாதகத்தில் கெட்டுபோனாலோ, அல்லது 9ஆம் இடத்தில் அதிக பாவ கோள்கள் இருந்தாலோ அல்லது 9ஆம் இட அதிபதி 6, 8, 12ஆம் இடங்களில் மறைந்த நிலையில் இருந்தாலோ பாமர யோகம் ஏற்படும். 

பாமர யோகம் மூலம் ஜாதகருக்கு முயற்சிகளை தடை ஏற்படும். வீடு, வாகனம் வாங்குதல், சொத்து சேர்த்தல், திருமணம் உள்ளிட்ட செயல்களில் தடை ஏற்படும். 

உதாரணமாக மீன லக்ன ஜாதகத்தில் 9ஆம் அதிபதியான செவ்வாய் பகவான் கடக ராசியில் நீசம் பெறுவது உடன், சனி மற்றும் கேது 3 டிகிரிக்குள் இருந்தால் இது பாமர யோக ஜாதகமாக கருந்தப்படும். தனம் மற்றும் பாக்கியாதிபதியான செவ்வாய் பலம் இழந்ததால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் பறிபோகும் நிலை உண்டாகும். ஜாதகருக்கு முழுமையான நற்பலன்கள் கிடைப்பது கடினமாகும். வாழ்கையில் பற்றாக்குறையும், முயற்சிகளில் சிக்கலும் தொடரும். 

இதில் பாக்கியாதிபதி நீசம் பெற்றாலோ, கிரகணம் பெற்றாலோ, பாவக்கோள்கள் உடன் சேர்ந்து இருந்தாலோ, பாவமான இடங்களில் வலுப்பெற்றாலோ இதுபோன்ற சிக்கல்களை அனுபவிக்க நேரிடும். பாமர யோகம் கொண்டவர்கள் திரும்ப திரும்ப முயற்சி செய்து தோல்வி காணும் நிலை உண்டாகும். 

குரு பார்வைதான் தீர்வு 

ஆனால் பாக்கியாதிபதியை குரு பார்த்தாலோ, அல்லது பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து இருந்தாலோ இந்த பாமர யோகம் நிவர்தி ஆகிவிடும். 

சிம்ம லக்ன ஜாதகத்தில் 9ஆம் அதிபதியான செவ்வாய் பகவான் 12ஆம் வீட்டில் நீசம் அடைந்து சனி உடன் சேர்ந்து இருந்தலும், தனுசு ராசியில் அமர்ந்த குரு ஆட்சி பெற்று 9ஆம் இடத்தையும், லக்னத்தையும் பார்ப்பதால் தனது முயற்சியினால் ஜாதகர் வெற்றிகளை குவிப்பார். 

ஜோதிட விதிப்படி யோகங்கள் அனைத்தும் யோகங்கள் அல்ல; தோஷங்கள் அனைத்தும் தோஷங்கள் அல்ல. சில நிலைகளில் தோஷங்களிலும் நன்மைகள் ஏற்படும், சில நிலைகளில் யோகங்களிலும் தீமைகள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.   

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel