Palmistry : உங்கள் உள்ளங்கையில் இந்த மூன்றும் உள்ளதா என்று பாருங்கள்! நீங்கள் பணகுவியலில் குளிப்பீர்கள்!
Palmistry : உங்கள் உள்ளங்கையில் இந்த மூன்றும் உள்ளதா என்று பாருங்கள்! நீங்கள் பணகுவியலில் குளிப்பீர்கள்!
உங்கள் உள்ளங்கையில் உள்ள ரேகைகளே உங்கள் பொருளாதார வெற்றியை நிர்ணயிக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதற்கு உங்கள் கைகளிலே சில அறிகுறிகள் இருக்கும். அவற்றை கண்டுபிடித்தாலே போதும். உங்களின் செல்வ நிலை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். அதற்கு நீங்கள் உங்கள் கைகளில் பார்க்கவேண்டிய விஷயங்களை முதலில் பார்க்கலாம்.
பண முக்கோணம்
உங்களின் பொருளாதார நிலை உயர்ந்திருக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் கைகளில் பண முக்கோணம் தெளிவாக இருக்க வேண்டும். அதற்குகு மங்களகரமான முக்கோணம் அதனை வெட்டும் கோடும் உங்கள் உள்ளங்கையில் இருக்க வேண்டும். அது மோதிர விரலுக்கு நேர்எதிராக கீழே இருக்க வேண்டும்.
அந்த முக்கோணம் தெளிவாகவும், எந்தவித குழப்பங்களும் இல்லாமல் இருக்க வேண்டும். இது பொருளாதார வெற்றியை குறிக்கிறது. உங்களிடம் செல்வம் அதிகளவில் சேரும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அந்த முக்கோணத்தில் அளவு மற்றும் ஆழம் இரண்டும், நீங்கள் எவ்வளவு செல்வத்தை சேர்ப்பீர்கள் என்பதை கூறுகிறது. இந்த பண முக்கோணத்தை கொண்டவர்கள் பண மேலாண்மையையும் சிறப்பாக செய்வார்கள்.
இவர்கள் முதலீடுகளையும் சிறப்பாக தேர்ந்தெடுப்பார்கள். இவர்களிடம் பொருளாதார வாய்ப்புக்களை கவரும் அம்சமும் இருக்கும்.
சூரிய ரேகை
அப்போலோ ரேகை அல்லது சூரிய ரேகை என்பது புகழ், அங்கீகாரம், தொழில் மற்றும் பொருளாதாரத்தில் வெற்றி ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த ரேகை விதி ரேகைக்கு இணையாக செல்லும், உள்ளங்கையின் அடிப்பகுதியில் இருந்து மோதிர விரல் நோக்கி செல்லும். பலமான, விரிசல் இல்லாத சூரிய ரேகை பொருளாதார செல்வச்செழிப்பை குறிக்கும்.
தலைமை பண்புகளையும் குறிக்கும். தொழில்முனைவோர் வாய்ப்புக்கும் இது முக்கியமானது. நீண்ட மற்றும் ஆழமான சூரிய ரேகை உள்ளவர்கள் கவர்ச்சி நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது செல்வத்தை பெருக்குவதற்கு அவசியம். மேலும் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள துறைகளில் உயர்ந்த இடத்தை பிடிப்பதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
ஜூபிடர் மலை
ஜூபிடர் மலை என்பது ஆள்காட்டி விரலுக்கு அடியில் இருக்கும். இது கைரேகை ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. இது இலக்கு, சக்தி மற்றும் வெற்றியை குறிக்கிறது. நன்றாக உள்ள இந்த ஜூபிடர் மலை தலைமைப்பண்புகளை குறிக்கிறது. இது பொருளாதார வெற்றிக்கு முக்கியமான ஒன்று.
வலுவான இந்த ஜூபிடர் மலையைக்கொண்டவர்கள், வாய்ப்புக்களை தொடர்ந்து பெறுவார்கள், அறிவார்ந்த முடிவுகளை எடுப்பார்கள். செல்வத்தை குவிப்பார்கள். அந்த மலையின் வடிவம், அளவும் ஒருவரின் செல்வச்செழிப்பை கூறும். அதைப்பொருத்தும் அவர்களின் செல்வந்த நிலை கணக்கிடப்படும்.
கைரேகை வைத்து உங்களுக்கு எவ்வளவு செல்வம் கிடைக்கும் என்பதை கூற முடியும். மேற்கூறிய சூரிய ரேகை, பண முக்கோணம் மற்றும் ஜூபிடர் மலை ஆகியவற்றை புரிந்துகொண்டாலே உங்களின் செல்வநிலையை தெரிந்துகொள்ளலாம். இவற்றை சக்தியைக்கொண்டே வாழ்வில் நீங்கள் எண்ணற்றவை பெறமுடியும்.
உங்கள் கைரேகை உங்களுக்கு வழிகாட்டும், உங்கள் செயல்கள், தேர்வுகள் மற்றும் மனநிலைதான் உங்கள் பொருளாதார அளவை நிர்ணயிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் கைரேகைகளின் அர்த்ததை புரிந்துகொண்டு உங்கள் செல்வந்த நிலையை உயர்த்திக்கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்