Horoscope luck: ராசி கெட்டவ.. ஊரார் பழிச்சொல்.. ‘ஒரு கைப்பிடி பச்சைப்பயிறு போதும்’ - அதிர்ஷ்டசாலியாக மாற்றும் பரிகாரம்!
உங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றும் பரிகாரம்!
சில பேரை பார்த்தாலே இந்த சமூகம் அவர்களை ராசி இல்லாதவர் என்று ஒதுக்கி வைக்கும். அப்படிப்பட்ட நபர்கள் தங்கள் மீது வைக்கும் அபிப்ராயங்களை உடைக்க செய்ய வேண்டிய பரிகாரத்தை இங்கு பார்க்கலாம்.
நேர்காணல் செல்லும் நபரோ, பிசினஸ் தொடங்கும் நபரோ, அல்லது ஏதோ ஒரு நல்ல காரியங்களுக்கு செல்லும் நபரோ, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களை கிழக்கு முகமாக நிற்க வைத்து, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஒரு கைப்பிடி பச்சை பயிறு, கொஞ்சம் துளசி, வில்வம் ஆகியவற்றை கொடுத்து வலது பக்கமாக மூன்று முறை அவரது தலையை சுற்ற வையுங்கள்.
சுற்றி முடித்த பின்னர் அதனை அந்த நபரின் முகத்திலேயே போட்டு விட வேண்டும். அந்த நபர் சென்றதற்கு பின்னர், அந்த பச்சை பயிரை எடுத்து பறவைகளுக்கு போட்டு விடலாம். துளசி மற்றும் வில்வத்தை செடிகளில் போட்டு விடலாம். அது யார் காலிலும் படாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பச்சை பயிறு தடைகளை உடைக்கும். துளசி துன்பத்தை போக்கும். வில்வம் வெற்றியை கொண்டு வரும். காரிய சித்தி உங்களுக்கு கை வரும்.
டாபிக்ஸ்