Numerology: இந்த தேதிகளில் உங்க பிறந்த தேதி இருக்கா பாருங்க.. திருமணம் ஆச்சுன்னா வேற லெவல் தான் நீங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology: இந்த தேதிகளில் உங்க பிறந்த தேதி இருக்கா பாருங்க.. திருமணம் ஆச்சுன்னா வேற லெவல் தான் நீங்க!

Numerology: இந்த தேதிகளில் உங்க பிறந்த தேதி இருக்கா பாருங்க.. திருமணம் ஆச்சுன்னா வேற லெவல் தான் நீங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 14, 2025 11:06 AM IST

Numerology: எண் கணிதத்தின் படி ஒரு சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு மிகவும் அற்புதமான வாழ்க்கையை பெறுவார்கள் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

Numerology: இந்த தேதிகளில் உங்க பிறந்த தேதி இருக்கா பாருங்க.. திருமணம் ஆச்சுன்னா வேற லெவல் தான் நீங்க!
Numerology: இந்த தேதிகளில் உங்க பிறந்த தேதி இருக்கா பாருங்க.. திருமணம் ஆச்சுன்னா வேற லெவல் தான் நீங்க!

இது போன்ற போட்டோக்கள்

ஒருவருடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் குறிப்பிட்ட சிலருக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் திருமணத்திற்கு பிறகு ஒருவருடைய வாழ்க்கை மிகப்பெரிய மாற்றம் அடையும் எனக் கூறப்படுகிறது. பல வகையில் திருமணத்திற்கு பிறகு சிலருடைய வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அப்படி அமையாது.

எண் கணிதத்தின் படி ஒரு சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு மிகவும் அற்புதமான வாழ்க்கையை பெறுவார்கள் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

எண் கணிதத்தின் படி குறிப்பாக 6, 15, 24, 8, 17, 26, 9, 18, 27 உள்ளிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் அவர்களுடைய வாழ்க்கை மாறிவிடும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் பிறந்தவர்கள் நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த தேதியில் பிறந்தவர்கள் மீது சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களின் தாக்கம் எப்போதும் இருக்கும் என கூறப்படுகிறது. அதன் காரணமாக இவர்கள் திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவார்கள் என கூறப்படுகிறது.

எண் 6

குறிப்பாக ஒரு மாதத்தில் வரக்கூடிய 6, 15, 24 உள்ளிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஏனெனில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்று இருப்பார்கள் என கூறப்படுகிறது. இயற்கையாகவே இவர்களுக்கு மக்களை ஈர்க்கும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு பண யோகத்தை பெறுவார்கள் என கூறப்படுகிறது. தொழில் ரீதியாக இவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

எண் 8

மாதங்களில் 8, 17, 26 உள்ளிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்றிருப்பார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் அடம்பிடிக்கக்கூடிய குணம் கொண்டவர்களாக கருதப்படுகிறது. அதிக வெற்றிகளை எப்போதும் காண்பார்கள் என கூறப்படுகிறது.

சனிபகவான் கடின உழைப்புக்கு எப்போதும் நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக சனி பகவானின் ஆசிர்வாதம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு இவர்களின் கடின உழைப்பால் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

எண் 9

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய 9,18,27 தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் செவ்வாய் பகவானின் ஆசிர்வாதத்தை எப்போதும் பெறுவார்கள் என கூறப்படுகிறது. அதனால் இவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் எப்போதும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை துணையின் ஆதரவோடு மிகப்பெரிய செல்வ செழிப்பை பெறுவார்கள் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்