2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 4ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அடிப்படை நியூமராலஜி எண் 4 ஆகும். இந்த எண்ணுக்கு உரிய கிரகம் ராகு பகவான் ஆவார்.
இன்னும் ஒருமாத காலத்தில் 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு விரைவில் தொடங்க உள்ளது. ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை கொண்டு ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும் என்பது போலவே நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.
நியூமராலஜி கணிப்பின் படி, ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வரும் 2025ஆம் ஆண்டில் வேலை, தொழில், நிதி, உறவு, ஆரோக்கியம் ஆகியவற்றில் உண்டாகும் பலன்களை தற்போது பார்க்கலாம்.
4ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்!
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அடிப்படை நியூமராலஜி எண் 4 ஆகும். இந்த எண்ணுக்கு உரிய கிரகம் ராகு பகவான் ஆவார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவான் செலுத்தும் தாக்கத்தால் வாழ்க்கையில் அதிக குழப்பத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு எதிர்பார்த்த இலக்குகளை அடைவீர்கள்.
உன்னதமான மற்றும் புரட்சிகரமான இலக்குகளை நீங்கள் கொண்டிருந்தாலும், அனுபவமிக்க வழிகாட்டியின் நேர்மையான வழிகாட்டுதல் இல்லாமல் நீங்கள் அவற்றை அடைய முடியாது. ராகுவின் தாக்கத்தால் உங்களின் பணிகளில் பிரச்சனைகள் வரலாம். நல்ல எண்ணங்களுடன், நல்ல மனிதர்களின் தோழமையுடன் முன்னேறினால் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். உங்கள் அன்புக்குரியவர் யாராக இருந்தாலும் அவர்களிடம் தவறான பழக்கம் இருந்தால் அவர்களுடன் இருக்கும் தொடர்பை துண்டிப்பது உங்களுக்கு நன்மைகளை தரும்.
பிறக்கபோகும் 2025 ஆம் ஆண்டு உங்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் விதமாக இருக்கும். இந்த ஆண்டில் உங்கள் இலக்குகளை அடைய தகுதியான நபர்களை ஆலோசகர்களாக சேர்த்துக் கொள்வது முக்கியம். ஆற்றலும் ஆர்வமும் நிறைந்து பல பணிகளை முடிப்பீர்கள். அதே வேளையில் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து இருப்பது முக்கியம், பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. உங்கள் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. அரசு மற்றும் அரசாங்கம் தொடர்பான சேவைகளில் சில தடைகளை நீங்கள் சந்திக்கலாம். நிலம், வாகனம் வாங்குவதில் கவனம் தேவை. காதல் உறவில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டியது முக்கியம். திறந்த மனதுடன் உண்மையாக இருப்பது பிரச்னைகள் வருவதை தடுக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். நிதி சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.