2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 3ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 3ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?

2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 3ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?

Kathiravan V HT Tamil
Nov 30, 2024 05:50 AM IST

3, 12, 21,30 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்கான நியூமராலஜி எண் 3ஆக வகைப்படுத்தப்படுகின்றது. 3ஆம் எண்ணுக்கு உரிய கிரகமாக குரு பகவான் உள்ளார்.

2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 3ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?
2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 3ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?

நியூமராலஜி கணிப்பின் படி, ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வரும் 2025ஆம் ஆண்டில் வேலை, தொழில், நிதி, உறவு, ஆரோக்கியம் ஆகியவற்றில் உண்டாகும் பலன்களை தற்போது பார்க்கலாம்.

3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்!

நீங்கள் எந்த மாதத்திலும் 3, 12, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்கான நியூமராலஜி எண் 3ஆக வகைப்படுத்தப்படுகின்றது. 3ஆம் எண்ணுக்கு உரிய கிரகமாக குரு பகவான் உள்ளார். 

அனுபவம், அறிவு, ஒழுக்கம், ஆளுமை, செல்வம், கல்வி ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக குரு பகவான் உள்ளார். எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே கல்வியின் மீது ஆர்வம் இருக்கும். எக்காரணம் கொண்டும் ஒழுக்கம் தவறமாட்டீர்கள். ஆனால் உங்கள் மீது அதிகாரம் செலுத்தும் எவரையும் நீங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள். எந்த பணிகளையும் விரைவில் கற்றுக் கொண்டு திறம்பட செயல்படுவீர்க்ள். 

வரும் 2025ஆம் ஆண்டில் 3, 9, 1, 2 மற்றும் 5 எண்கள் உங்கள் மீது பெரும் தாக்கத்தை செலுத்தும். இந்த ஆண்டில் குடும்பம் மற்றும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக சேவைகள் செய்வதில் ஆர்வம் பிறக்கும். ஆக்கப்பூர்வமான திட்டங்களில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.  அரசாங்க வழிகளில் அனுகூலம் கிடைக்கும். நீதிமன்றம் சார்ந்த வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பண விவகாரத்தில் வெற்றிகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் மூலம் நன்மைகள் உண்டாகும். அனுபவம் வாய்ந்தவர்களின் சரியான நேரத்தில் உங்களுக்கு வழிகாட்டுவர். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்