2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?

2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?

Kathiravan V HT Tamil
Nov 29, 2024 09:13 PM IST

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியூமராலஜி எண்ணாக ‘2’ஆம் எண் வகைப்படுத்தப்படுகின்றது. 2ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சந்திர பகவான் ஆகும். கலை, படைப்பு திறன், மனநிலை ஆகியவற்றுக்கு உரிய கிரகமாக சந்திர பகவான் உள்ளார்.

2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?
2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?

நியூமராலஜி கணிப்பின் படி, ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வரும் 2025ஆம் ஆண்டில் வேலை, தொழில், நிதி, உறவு, ஆரோக்கியம் ஆகியவற்றில் உண்டாகும் பலன்களை தற்போது பார்க்கலாம்.

2ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியூமராலஜி எண்ணாக ‘2’ஆம் எண் வகைப்படுத்தப்படுகின்றது. 2ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சந்திர பகவான் ஆகும். கலை, படைப்பு திறன், மனநிலை ஆகியவற்றுக்கு உரிய கிரகமாக சந்திர பகவான் உள்ளார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடியவர்கள். சிறிய விஷயங்களுக்கு கூட பெரியதாக வருத்தப்படுவார்கள். தன்னுடன் இருக்கும் பிறரின் உணர்வுகளை முழுமையாக மதிப்பீர்கள். சந்திரன் தாய் தெய்வம் என்பதால், நீங்களும் ஒரு தாயைப் போல மற்றவர்களை நேசிப்பீர்கள். 

எண் கணித ஜாதகம் 2025 இன் படி, உங்கள் மன திறன் மிகவும் வலுவாக இருக்கும். பணிகளை முறையாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உறவுகளையும், நட்புகளையும் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். இந்த காலத்தில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவீர்கள். சிலர் திருப்தி இல்லாத வேலையை விட்டுவிட்டு புதிய வேலைகளை தேர்வு செய்வீர்கள். சிலர் புதிய தொழில்களையும் செய்ய முயற்சி செய்வீர்கள். சவால் நிறைந்த பணிகளை எடுத்து செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கூடும். எந்த வேலையையும் அவசரப்படாமல் செய்ய வேண்டியது அவசியம். பொறுமையுடன் செய்யப்படும் பெரும்பாலான வேலைகள் உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும். வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது முக்கியம். உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு கெட்டுப்போகாமல் இருக்க முயற்சி செய்வது முக்கியம். நிலம், கட்டிடம், வாகனங்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை.

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் வெற்றிகளை தரும். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் சிறப்பான முடிவுகளை தரும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்