Numerology Horoscope: நவம்பர் 26ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: நவம்பர் 26ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Numerology Horoscope: நவம்பர் 26ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Nov 25, 2024 02:17 PM IST

நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology Horoscope: நவம்பர் 26ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
Numerology Horoscope: நவம்பர் 26ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

எண் 1

ஒன்றம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிஷ்டம் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். வாகனத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்.

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அதிபதி என்பதால் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வது நன்மைகள் கிடைக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா செய்யுங்கள். பணியிடங்களில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். 

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்தவும்.  தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையில் நீங்கள் முனைப்புடன் இருக்க வேண்டும். சில திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். 

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்க வழியில் நிலுவையில் இருந்து வரும் பணிகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது நல்ல நேரம். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடங்களில் உங்களுக்கு செல்வாக்கு கூடும். 

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் வீடு வாங்குவது மற்றும் வீட்டை பழுது நீக்குவது குறித்து யோசிப்பீர்கள். பணம் சேமிப்பை அதிகம் செய்வீர்கள். புதிய முதலீடுகள் குறித்து சிந்தீப்பீர்கள். பங்குசந்தை முதலீடுகள் பலன் தரும். குழந்தைகள் வழியில் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும் என்பதால் நேர்மறை சிந்தனை அவசியம். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். தேவையற்ற அலைச்சல் இருக்கும். பேச்சிலும், செயலிலும் நிதானமாக இருங்கள். 

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனதில் சில கவலைகள் வந்து போகலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் கூடும். உங்கள் துறையில் வளர்ச்சியுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். நிறைய சலசலப்புகள் இருக்கும், ஆனால் உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இயல்பான நாளாக இருக்கும். உங்கள் செயல்பாடுகளுக்கு மனைவி ஆதரவாக இருப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு  உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

எண் 9

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். இந்த நாளின் தொடக்கத்தில் பணத் தட்டுப்பாடு உண்டாகும். ஆனால் மாலைக்குள் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்