Numerology Horoscope: ஜனவரி 20ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: ஜனவரி 20ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Numerology Horoscope: ஜனவரி 20ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Jan 19, 2025 01:34 PM IST

நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology Horoscope: ஜனவரி 20ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
Numerology Horoscope: ஜனவரி 20ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

எண் 1 
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியற்ற நாளாக இருக்கும். கோபத்தை தவிர்க்கவும். கல்விப் பணிகளில் சிரமம் ஏற்படலாம். உஷாராக இருங்கள். உத்தியோகத்தில் பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

எண் 2
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும், ஆனால் உரையாடலில் சமநிலையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். ஆன்மீக ஈடுபாடு கூடும். பிள்ளைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனம் கலங்கும். பொறுமை குறையும். அமைதியாக இருங்கள். படிப்பதில் ஆர்வம் இருக்கும். கல்விப் பணிகளில் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இருந்தாலும் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும். வாழ்கையில் முன்னேற்றப் பாதை அமையும். வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள்.  மனைவியின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தின் உணர்வுகள் மனதில் இருக்கலாம். குடும்பத்துடன் புனித ஸ்தலத்திற்கு செல்லலாம். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனதில் சில கவலைகள் இருக்கலாம். தன்னம்பிக்கை குறைபாடு இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்யுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனம் அமைதியற்றதாக இருக்கும். மனதில் ஏமாற்றம் மற்றும் அதிருப்தியை தவிர்க்கவும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். கல்விப் பணிக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு  உடல் மற்றும் மனரீதியாக அழுத்தங்கள் உண்டாகும். மனம் அமைதியற்று இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையற்ற கோபத்தையும் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். பணியில் உள்ள அதிகாரிகளுடன் இணக்கத்தை பராமரிக்கவும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். 

எண் 9

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் மரியாதை கூடும். தன்னம்பிக்கை நிறைந்த நாள் இது. ஆனால் மனதில் சில ஏற்ற தாழ்வுகளும் இருக்கும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு கூடும். இனிப்பு உணவுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்பு அதிகமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்