Numerology Horoscope: நவம்பர் 19ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: நவம்பர் 19ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Numerology Horoscope: நவம்பர் 19ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Nov 18, 2024 02:41 PM IST

நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology Horoscope: நவம்பர் 19ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
Numerology Horoscope: நவம்பர் 19ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். அலுவலகத்தில் புதிய பணிகளை முன்னெடுத்து செய்வீர்கள். உங்கள் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். நேர்மையான அணுகுமுறை குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். 

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்கை துணையிடம் அனுசரித்து செல்வது நல்லது. காதல் உறவில் ஈகோ வேண்டாம். குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவிடுங்கள். பணியிடங்களில் உண்டாகும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். பணத்தை கவனமாக கையாளவும்.

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நேர்மறையாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். காதல் உறவு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தரும். பணியிடத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். 

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். புத்திசாலித்தனமான நிதி முதலீடுகளுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குங்கள், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் தீரும். பணியிடங்களில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். 

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப பிரச்னை இருக்கும். சங்கடங்களை தீர்க்க நேர்மறையான எண்ணத்தை கையாளுங்கள். உங்கள் தகுதியை நிரூபிக்க திறமையை வெளிப்படுத்தி போராட வேண்டும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை . பழைய முதலீடுகள் ஆதாயம் தரும். 

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணியிடத்தில் பணிச்சுமை கூடும். புதிய சிந்தனைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு படைப்பாற்றல் கூடும். குழு சார்ந்த செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். தீய பழக்க வழக்கங்களை மாற்றவும், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள நேரம் ஒதுக்குவீர்கள். 

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். இலக்குகளை நோக்கி முன்னேறவும் மாற்றத்தை கொண்டு வரவும் வாய்ப்புகள் உண்டாகும். பாதுகாப்பான முதலீடுகள் எதிர்காலத்தில் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வருமானத்தை அளிக்கும்.

எண் 9

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சவால்கள் நிறைந்த நாள் ஆகும். ஆரம்பத்தில் கடினமாக தோன்றியவை சிரமமின்றி நிறைவேறும். உங்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் பெரும் ஆதாயங்களை கொடுக்கும். குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சி கூடும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்